பக்கம்:நிழல் முகங்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சு. சமுத்திரம்

நடுல அத்தை பேசி முடித்ததும், ஊர்ப் பெரிய மனிதர்களில் ஒருவரான என் பெரிய மாமா இறுதியாகப் பேசுகிறவர்போல் பேசினார்.

"வீட்டு விவகாரம் வெளில வந்த பிறகு, இனிமேல் பேசிப் பிரயோஜனம் இல்ல. இனிமேல், இவங்க உன் வீட்ல இருக்கப் படாது. இவங்க. சொத்துப் பத்துக்கு பணம் அனுப்புவது வாஸ்தவம்தான். அந்தப் பணத்தை அனுப்புனவரு என் தாய்மாமா வேல்மயில். அவரோட தங்கச்சிதான் என்னோட அம்மா. வேல்மயில் தங்கச்சிக்கும் தங்கச்சி மகனுக்கும் செய்தார். இனிமேல் என்கிட்ட எது கேட்கணுமுன்னாலும் அவர்தான் கேட்கணும். இவளுக ரெண்டு பேருக்கும் உரிமை இல்லை. வேணுமுன்னால் கோர்ட்டுக்குப் போகட்டும்."

"என்னால் சும்மா இருக்க முடியவில்லை. பெரிய மாமாவுக்கும் அவர் மகன் தாமரைப்பாண்டிக்கும் முன்னால் போய் நின்றேன். சின்ன மாமா மகன் வைத்தியலிங்கம் என் மெய்க்காவலன்போல் என் அருகே வந்து நின்றான். நான் சவால் குரலில் கத்தினேன்."

"ஒங்களை ஜெயிலுக்கு அனுப்புற அளவுக்கு என்கிட்டே ஆதாரம் இருக்குது. உங்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி எங்க சொத்துக்களை மீட்டிக் காட்டலன்னா என் பெயர்'தமிழ்ச்செல்வி இல்ல மாமா."

"மாமா மகன் தாமரைப்பாண்டி, என்னை அடிக்க வருவது போல் வந்தான். உடனே சின்னமாமா மகன் "டேய் முதல்ல என்கிட்டே வாடா" என்றான்."

@

அந்த ரயில், காலதாமதத்தை ஈடுகட்டுவதற்காக அலறியடித்த படி ஓடினாலும், பட்ட காலிலேயேபடும் என்பதுபோல், தாமதப் பட்டுபோன அந்த ரயில், ஊர் பேர் தெரியாத ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

அரைமணி நேரமாகியும் நகர்ந்த பாடில்லை. எதிர்த்திசையில் ஒரு சரக்கு ரயில் வருகிறதாம். அது இங்கே வந்த பிறகுதான், இந்தத் துரிதரயில் அங்கு போகமுடியுமாம். எல்லா பயணிகளும் முணுமுணுத்துக் கொண்டு, கொடிக்கம்ப விளக்கை குற்றவாளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/71&oldid=588332" இலிருந்து மீள்விக்கப்பட்டது