பக்கம்:நிழல் முகங்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 59

போல் எட்டியும், இறங்கியும் பார்த்தபோது, நவாப்ஜான் குழுவினர் நகராமலேயே இருந்தார்கள். அவர்கள் கண்களைக்கூட நகர்த்தவில்லை.

தமிழ்ச்செல்வி, தன் சுமையை அவர்கள் தோளில் சுமையை இறக்கிக்கொண்டே இருந்தாள்.

"எப்படியோ நியாமாப் பேசமுடியாத ஊரார், மாமா மகன்களுக்கு இடையே விலக்குத் தீர்த்தார்கள். வைத்தியலிங்கத்தை அவன் தந்தை பிடித்துக் கொண்டார். இதற்குள் பெரிய மாமா நடுல மாமாவின் மனைவிகளும், அவர்களது மக்கள் புடைசூழ வந்து எங்களைத் திட்டித் தீர்த்தார்கள். ஒழுங்காக ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பி மூவர் குடும்பத்தையும் நாங்கள் சீர்குலைத்து விட்டோமாம். நாங்கள் போகிற இடத்தில் புல் முளைக்காதாம். மலேசியாவில் நாங்கள் எவன்கூட எப்படியோ போய்விட்டு' இப்போது இருக்க முடியாமல் துடிக்கிறோமாம். இவ்வளவு பேச்சையும் என் அத்தைகள் நாங்கள் கொடுத்த சேலைகளைக் கட்டியபடியே திட்டினார்கள். என் நடுல மாமா மகள் நான் கொடுத்த நெக்லஸையும் தங்கக் காப்புகளையும் குலுக்கியபடியே திட்டினாள். சின்ன மாமா நானும் அரிவாளை எடுக்க வேண்டியது இருக்கும் என்றதும் எல்லோரும் அடங்கினார்கள்."

"உடனே, சின்ன மாமாவின் ஆணைப்படி பெரிய மாமா வீட்டில் இருந்து புறப்பட்டோம். ஒரு சமயம் கனமாக இருந்த சூட்கேஸ்களை ஒரு கையால், தூக்கியபடியே நடந்தோம். எங்களை அந்தக் கோலத்தில் பார்த்துவிட்டுப் பல பெண்கள் அழுது விட்டார்கள். தெருவில் நடந்தபோது அம்மாவின் சிநேகிதிகள் பெரிய மாமா வீட்டை நோக்கி மண்ணை அள்ளிப் போட்டார்கள்."

"எப்படியோ சின்ன மாமா வீட்டுக்கு வந்து விட்டோம். மாமா வீடு ஒலை வீடு. அதுவும் ஆடிக்காற்றில் அந்த ஒலைகள் பிய்த்துக் கொண்டு ஒடும். மழைக் காலத்தில் ஒலைக் கசிவுகளையும் சுமந்து கொண்டு, மழைத்துளிகள் வீட்டுக்குள் கரிக்கரியாய் விழும். சின்ன மாமாவுக்கும் நிலத்தில் இறங்காமலே வேலையாட்களை வைத்து சாகுபடி செய்யும் அளவுக்கு நிலம் இருந்ததாம். ஆனால், மனைவி ரூபத்தில் அவருக்கு வஞ்சகமும் அண்ணன் ரூபத்தில் கெட்ட காலமும் வந்து சேர்ந்தன. அவரது முதல் மனைவி கல்யாணத்திற்கு முன்பே ஒரு மாதிரியாம். அவளும் உள்ளுர்க்காரிதான். பெரிய மாமா அவளை, தெரிந்தே தம்பி தலையில் கட்டியிருக்கார். அதற்காகப் பெண் வீட்டில் 'நாலு மரக்கால்” நிலத்தை லஞ்சமாகவும் வாங்கிக் கொண்டாராம். சின்ன மாமா மனைவி கல்யாணம் ஆன பிறகும் பழைய புத்தியை விடவில்லையாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/72&oldid=588335" இலிருந்து மீள்விக்கப்பட்டது