பக்கம்:நிழல் முகங்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சு. சமுத்திரம்

கடைசியில் அவளே, ஊர் அவமானத்திற்கு உட்பட்டோ அல்லது வேறு காரணத்தாலோ தற்கொலை செய்து கொள்ள, அது சின்ன மாமா மீது கொலைக் குற்றமாக விழுந்திருக்கிறது. வழக்கை பெரிய மாமா முன்னின்று நடத்தியிருக்கிறார். முடிவில் சின்னமாமா விடுதலையாகிவிட்டார். அதற்கு விலையாக அவரது சொத்து முழுதும் வழக்குச்செலவு என்ற பெயரில் பெரிய மாமாவுக்கு அடிமையாகிவிட்டது."

"மாமாவின் இரண்டாவது மனைவி, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவள். வாயடி வழக்கடி செய்யாத அப்பாவி. எப்போதோ எங்கம்மா ஒரு தங்க வளையல் கொடுத்தாளாம். அதையே அத்தை சொல்லிச் சொல்லிக் காட்டுவாள். அப்போதெல்லாம் எங்கம்மா அல்லாடுவாள். தாமரைப் பாண்டியனைக் கருதி, அவ்ன் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் செய்த அளவில், ஒரு சதவீதம்கூடத் தம்பிக்குச் செய்யவில்லையே என்ற ஆதங்கம்; கொஞ்சம் செய்திருந்தால், தம்பியை கைதுக்கி விட்டிருக்கலாமே என்ற ஏக்கம்."

"ஆனால், மாமா இதை கண்டுக்கவே இல்லை. அவருடைய மகன் வைத்தியலிங்கமும், மனதை அற்ப எண்ணங்களுக்கு அடகு வைக்காதவன். அப்பாவும், மகனும், வந்ததும், வராததுமாக நாங்கள் சாப்பிட்டோமா என்றுதான் கேட்பார்கள். ஒருநாள் பெரிய மாமாவிற்கும் நடுல மாமாவிற்கும் வாய்ச்சண்டை. அவர்களது குடும்பத்தினருக்குள் அடிதடி சண்டை தாமரைப் பாண்டியனுக்கும், ரத்தினவேலுக்கும் குஸ்தி சண்டை விசாரித்துப் பார்த்ததில் விவகாரம் எங்களைப் பற்றியது. என் அப்பா அனுப்பிய பணத்தைத் தாத்தா அனுப்பியதாகக் கூறி, தாய் மாமன் சொத்தில் தனக்கு உரிமையுண்டு என்று என் பெரிய மாமா சொன்னாரே அந்த வாக்குமூலத்தை நடுல மிாமா பிடித்துக் கொண்டாராம். தாய் மாமா அனுப்பிய எல்லாப் பணத்தையும் நகையையும் கணக்குப் போட்டு சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டுமாம். இதில்கூட என் சின்ன மாமா. லிஸ்டில் வரவில்லை."

"இந்த அற்பத்தனத்தைப் பார்த்து, நான் வெகுண்டு எழுந்தேன். எங்கள் சொத்துக்களை மீட்க உறுதி பூண்டேன். ஊர்ப் பெரியவர்களால் ஒன்றும் ஆகாது என்பது தெரிந்துவிட்டது. வைத்தியலிங்கத்தைத் துணைக்கு வைத்துக் கொண்டு தாசில்தாரைப் பார்த்தோம். அவர், என் கேஸ் கிரிமினல் என்றும், வேண்டுமானால் போலீஸிடம் போகலாம் என்றும் கருத்துத் தெரிவித்தார். காவல் நிலையத்திற்குப் போனோம். விஷயத்தை எடுத்துச் சொன்னோம். விவகாரத்தை அனுதாபமாகக் கேட்டவர்கள், என் பெரிய மாமா பெயரைக் கேட்டதும், வீரத்தை விலக்கிக் கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/73&oldid=588336" இலிருந்து மீள்விக்கப்பட்டது