பக்கம்:நிழல் முகங்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல், முகங்கள் - 61

விவகாரம் சிக்கல் என்றும், ஆகையால் நான் கோர்ட்டுக்குத்தான் போகலாம் என்றும் சொன்னார்கள்."

"என் சின்ன மாமா மகன் வைத்தியலிங்கம், என்ன ஸார் இப்படி இழுத்தடிக்கீங்க என்று சாதாரணமாகத்தான் கேட்டான். உடனே ஏட்டய்யா "என்னடா கம்பி எண்ணணுமா. மட்டு மரியாதையில்லாமல் பேசுறே. டேய் லாக்கப்பைத் திறங்கடா" என்றார். நான் அவரைச் சமாதானப்படுத்தினேன். என் பெரிய மாமா என் தந்தை பேரில் அவர் அனுப்பிய பணத்தில் நிலம் வாங்கியதாக எழுதிய பல கடிதங்கள் என்னிடம் இருப்பதாகச் சொல்லி, ஆகையால் பெரிய மாமா மோசடி செய்தார் என்றும், அவர் மீது காவல்துறை நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாதாடினேன். அவர், இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்றேன் என்று சொல்லிவிட்டு, லாக்கப் வாசி ஒருவரை, கெட்ட கெட்ட வார்த்தை களால் திட்டினார். அது எனக்குத்தான் என்பதைப் புரிந்து கொண்டு, அங்கிருந்து வெளியேறி விட்டேன்."

"நான் விடவில்லை. கவர்னரில் இருந்து ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வரைக்கும் மனு மனுவாகப் போட்டேன். கிராமத்துத் தபால் நிலையத்தில் இடக்கு மடக்கு நடக்கலாம் என்று நகரத்துத் தபால் நிலையத்தில் போட்டேன். ஒவ்வொரு வாரமும் பதிலை எதிர்பார்த்தேன். தபால்காரரே எனக்குத் தெய்வமானார். அவர் நடமாடும் இடமே எனக்குத் திருத்தலமானது. நான் புளித்துப் போன சமயத்தில், அதே அந்த ஏட்டய்யா வந்தான். ஐந்தரையடி உடம்பை ஐந்தடியாகச் சுருக்கிக் குழைந்தான். காவல் நிலையம், என் பெரிய மாமா மீது நடவடிக்கை எடுத்து, என் சொத்துக்களை மீட்பதற்கு உறுதி பூண்டிருப்பதாகத் தெரிவித்தான். மீசையில்லாத உதட்டைத் தடவிவிட்டபடி, பருத்த வயிற்றில் மத்தளம் மாதிரிக் கைகளால் கொட்டியபடி, அநேகமாக என் மாமா, ஐந்தாண்டுக் காலம் சிறைக்குப் போகவேண்டியது இருக்கும் என்றதும் அம்மா பயந்துவிட்டாள். என்னைக் கோபமாகக்கூடப் பார்த்தாள். ‘எங்களோட சொத்துக்களை வாங்கிக் கொடுங்க. அண்ணனுக்கு "அதை" வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்று மன்றாடினாள். ஏட்டய்யா, நீதிபதி அப்படி ஒரு தீர்ப்பளித்தால், தானே. அதை ரத்து செய்ய முடியும் என்பதுபோல், தலையை மேலும் கீழும் ஆட்டினார். பிறகு வந்த விஷயம் அப்போதுதான் நினைவுக்கு வந்தவர்போல், தலையை மாடு உதறுவது மாதிரி உதறிக் கொண்டே 'சரிம்மா. ஒன் அப்பாவுக்குச் சொத்து வாங்குவது சம்பந்தமாய் ஒன் பெரிய மாமா எழுதின லெட்டர்களை ஒன்று விடாமல் கொடு. இன்ஸ்பெக்டர் வாங்கிட்டு வரச்சொன்னார். ஒன் மாமனை விடப் போறதில்ல. என்றார்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/74&oldid=588338" இலிருந்து மீள்விக்கப்பட்டது