பக்கம்:நிழல் முகங்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சு. சமுத்திரம்

"எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கடைசியில் கவர்னருக்குப் போட்ட மனுவோ அல்லது தலைமைச் செயலாளருக்குப் போட்ட மனுவோ, காவல் நிலையத்தை இயங்கச் செய்துவிட்டது. நான், அம்மாவின் எதிர்ப்பையும் மீறி, தனியாக எடுத்து வைத்திருந்த முப்பத்து மூன்று கடிதங்களை எடுத்துக் கொடுத்தேன். அம்மா ஊர் நினைவு வரும்போதெல்லாம், படிப்பதற்காக வைக்கப்பட்ட கடிதங்கள், இப்போது மாமாவுக்கு படிப்பினையாகப் போவதில் அம்மாவுக்கு அதிர்ச்சி. எனக்கு மகிழ்ச்சி"

"கடைசியில் நியாயம் வெல்கிறது என்ற மகிழ்ச்சியில் நான் தூங்கவே இல்லை; அம்மாவும் தூங்கவில்லை. ஆனால் நோக்கங்களோ எதிரெதிர். நான், மாமா வீட்டிற்கு போலீஸ் வரப்போவதை எதிர்பார்த்து எதிர்பார்த்து தூக்கத்தையும் துக்கத்தையும் விரட்டி விட்டேன். ஆனாலும், போலீஸ் வரவில்லை. ஒவ்வொரு நாளும் அடுத்தநாள் வருவார்கள் என்று எதிர் பார்த்தேன். இடையே மாமா வீட்டில் சிரிப்புச் சப்தம் தான் பலமாய்க் கேட்டது. எப்படியோ, ஒரு வாரம் வரைப் பல்லைக் கடித்துக் கொண்டேன். மறுநாள் வாய் திறக்கத் தீர்மானித்தேன். வைத்தியலிங்கத்தைக் கூட்டிக் கொண்டு, கோணச்சத்திரம் காவல் நிலையத்திற்குப் போனேன். ஊர்க் காரர்களில் பலர் எங்களை விநோதமாகப் பார்த்தார்கள். வழியில் தென்பட்ட பெரிய மாமா, காறித் துப்பப் போனார். என் பக்கத்தில் வைத்தியலிங்கம் வருவதைப் பார்த்து விட்டோ என்னமோ, பயந்து போனவர்போல எச்சிலை விழுங்கிக் கொண்டார். எதிரே வந்த தாமரைப் பாண்டி வேறுபக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான்."

“காவல் நிலையக் காம்பவுண்டுக்குள் நுழைந்ததும், வைத்தியலிங்கத்தை ஒரு மரத்துப் பக்கமாக நிற்கச் சொன்னேன். ஏதாவது ஏடாகோடமாய்ப் பேசிக் காரியத்தைக் கெடுத்து விடக் கூடாதே என்ற எண்ணம். காரியம் கெட்டாலும் பரவாயில்லை. அந்த அப்பாவிப் பையனைக் காவல்துறை "காலி" செய்துவிடக் கூடாதே என்ற பயம்."

"ஏட்டய்யா என்னைப் பார்த்துவிட்டு இன்னொரு பெண்ணைத் திட்டினார். "ஒனக்கெல்லாம் எதுக்குடி. அய்யய்யோ இந்தக் காவல் நிலையத்தை நினைத்தாலே என் உடல் நடுங்குது. பணக் காரங்களுக்கு பல்லுக் காட்டுற, அதே பல்லை ஏழைகளைப் பார்த்துக் கடிப்பதும் காவல்துறையின் கலை. நான் போன சமயத்தில், ஒருத்தரை ஒரு போலீஸ்காரர் ரூல்தடியால் விளாசிக் கொண்டிருந்தார். அந்த அப்பாவி, ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வீட்டுப் பக்கம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடிக் கொண்டிருந்தானாம். அந்த அப்பாவியோ என் பையனுக்கு சாதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/75&oldid=588341" இலிருந்து மீள்விக்கப்பட்டது