பக்கம்:நிழல் முகங்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 63

சர்ட்டிபிகேட் வாங்கப் போனேன் ஸார். சத்தியமாய் அதைத்தான் ஸ்ார் வாங்கப் போனேன்' என்று கதறினான். அவனின் கெஞ்சலுக்குக் காது கொடுக்காமலே, போலீஸ்காரர், அந்த எளியவரை ரூல்தடியால் வாங்கு வாங்கென்று வாங்கிக் கொண்டிருந்தார்."

"எனக்கு கேட்கவேண்டும் என்று நினைத்தோ என்னமோ ஏட்டய்யா அந்த அப்பாவியை அடிப்பதை நிறுத்தச் சொன்னார். பிறகு, என்னை, உறுமலோடு பார்த்தார். வீட்டுக்குக் குழைவாய் வந்த ஏட்டய்யா, இப்போது வீறாப்பாய்ப் பார்த்தார். நான்தான் பேச்சைத் துவங்கினேன்."

ஸ்ார்... எங்க மாமா மே ல் ... இன்னும் நடவடிக்கை எடுக்கலியே..?

'யார்மேல எப்போ நடவடிக்கை எடுக்கணுமுன்னு எங்களுக்குத் தெரியும்:

'விஷயம் எந்த அளவுல இருக்குதுன்னு தெரிஞ்சுக்க எனக்கு உரிமை இருப்பதாய் நினைக்கேன்!

"இதோ பாரும்மா எது பேசணுமுன்னாலும் இன்ஸ்பெக்டர் கிட்டே பேசிக்கோ"

"அவர் எப்போ வருவார்."

"எப்பவும் வருவார். இப்பதான் வருவார்ன்னு சொல்ல முடியாது. டேய். ஏண்டா. அந்தத் திருட்டுப் பயலை அடிக்கறதை விட்டுட்டீங்க காசு நீட்டுனானா."

"காசு நீட்ட முடியாத அந்த "சந்தேகப் பேர்வழி'யின் கால்களை நீட்டச்சொன்னான். அதன்மேல் ரூல் தடியை குறுக்காய்ப் போட்டார்கள். ஒரு கான்ஸ்டபிள் அதில் ஏறி நின்றார்."

"அந்த அப்பாவி, வெட்டப்பட்ட ஆடுபோல் துடித்தார். கரைக்கு வந்த மீன்போல் துள்ளினார். எனக்கு எதிர்த்துப் பேச வேண்டும் என்ற துடிப்பு. ஆனால் வாயைத் திறக்க முடியவில்லை. கான்ஸ்டபிள், இப்போது அந்த அப்பாவியை விட்டுவிட்டார். காரணம், காக்கிச் சட்டைக்காரருக்கு அவனை அடித்து அடித்துக் களைப்பு ஏற்பட்டு விட்டது. சோடா குடிப்பதற்காகப் போவதாய்ச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்."

"இந்தச் சமயத்தில அட்டகாசமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. சினிமா நடிகர் மாதிரி ஒருத்தர். ஆனால், போலீஸ் டிரஸ். எல்லோரும் சல்யூட் அடித்தார்கள். அந்த ஆசாமி இன்ஸ்பெக்டரே தான் வாகனத்தில் இருந்து இறங்கும்போதே, 'அந்தப் பயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/76&oldid=588344" இலிருந்து மீள்விக்கப்பட்டது