பக்கம்:நிழல் முகங்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சு. சமுத்திரம்

யாருய்யா. ரெளடி மாதிரி நிற்கான்" என்றதும், போலீஸ்காரர்கள் லத்திக் கம்புகளோடு, அவனை நோக்கிப் போகப் போனார்கள். உடனே நான் குறுக்கிட்டு "என்னோட மாமா மகன் ஸார். என் பெயர் தமிழ்ச்செல்வி ஸ்ார். மலேசியாவில் இருந்து வந்தவள் ஸார்." என்றேன். அவர் என்னை எடைபோட்டுப் பார்த்தார். பிறகு உள்ளே போய் விட்டார்."

"இன்ஸ்பெக்டர் கூப்பிடுவார் என்று நான் காத்திருந்தேன். கூப்பிடவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு, நானே உள்ளே போனேன். எதிர் நாற்காலியில் உட்காரப் போனேன். ஆனால் அவர் பார்த்த பார்வையால் எனக்கு உட்கார மனம் வரவில்லை. நான் பயபக்தியுடன் கேட்டேன்."

"ஏட்டய்யா என் வீட்டில் இருந்து பெரிய மாமா எழுதின லெட்டர்களை வாங்கிட்டு வந்தார் ஸார்."

"எனக்குத் தெரியும்."

"அதோட நிலமை, இப்போ எப்படி இருக்கு சார்"

இன்ஸ்பெக்டர், அலட்சியமாய்ப் பதிலளித்தார்.

“எல்லா லெட்டரையும் படித்தேன். ஒன்றுகூட பிராஸி கியூஷனுக்குக் தேறாது. ஒவ்வொரு லட்டர்லயும் முன்னுக்குப்பின் முரணான வரிகள். இதை நீங்கள் பேசாமல் விடுறதே நல்லது. உங்களுக்கும்."

"சரி ஸ்ார். நான் கோர்ட் மூலம் பார்த்துக்கிறேன். அந்த லெட்டருங்களைக் கொடுங்க"

"எங்கேயோ பழைய குப்பையில கிடக்கும். தேடிப் பார்த்துத் தாரோம்."

இதற்குள் ஏட்டய்யா அங்கிருந்தபடியே பணிவன்புடன் கத்தினார்.

"முந்தா நாள் குப்பைகளை எரிச்சோம் பாருங்க. அதுல படுகுப்பையாய்க் கசங்கிப் போன அந்த லெட்டருங்களையும் எரிச்சிட்டோம். மொதல்லயே இந்தம்மா லட்டருங்களைத் திருப்பித் தரணுமுன்னு சொல்லியிருந்தால், லட்டருங்க தப்பியிருக்கும்."

'ஒவ்வொரு விஷயத்தையும் ஒங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணுமா ஸ்ார். கடிதங்களை எரித்ததுக்குப் பதிலாய் நீங்க என்னையே எரிச்சிருக்கலாம் ஸ்ார். இது அக்கிரமம். அடாவடித்தனம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/77&oldid=588347" இலிருந்து மீள்விக்கப்பட்டது