பக்கம்:நிழல் முகங்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 65

இன்ஸ்பெக்டர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். பிறகு எழுந்து என்னை எதிரியைப் பார்ப்பதுபோல் பார்த்தார். அப்புறம் அட்டகாசமாக தனக்கும் மனைவி மக்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து பேட்டை ரெளடி மாதிரி கேட்டார்.

"என்னடி ஒன் மனசுல நினைச்சுக்கிட்டே? அதோ அந்தச் சின்னப் பயலோட ஒனக்கு உறவாம்.?. ஊர்ல கள்ளச்சாராயம் வேற காய்ச்சுறியாம்.? இந்தாப்பா! இவளைப் பிராத்தல் கேஸ்ல புக் பண்ணு. ஒன் மனசுலே என்னடி நினைச்சுக்கிட்டே?”

1922)ہ

அந்த ரயில், ஒட்டப் பந்தயத்தில் குதிகாலில் உட்கார்ந்தபடி தயார் நிலையில் இருப்பார்களே, அப்படி நிற்பது ஒடுவதற்கே என்பதுபோல், ஒரே ஒரு ஊளைச் சத்தத்தை மட்டும் போட்டுவிட்டு பாய்ந்தது.

பள்ளமான ரயில் பாதை அதில் குப்புற ஓடுவதுபோல் ஓடியது. இந்த தலைகீழ்ப் பாய்ச்சலை அனுமானித்து "பலார்ஷா ஸ்டேஷன் வரப்போகுது. வரப்போகுது என்றான் நவாப்ஜான். இப்போது பலராமனுக்கு ஒரு சந்தர்ப்பம். "டேய். டேய். சாப்பாட்டை நினைக்க இதுவா சமயம். இப்போ அந்த எண்ணம் ஒனக்கு வரலாமா கயிதே" என்றான். பதிலுக்குப் பேசப் போன நவாப்ஜான் - "வண்டியில் பிரயாணிகளுக்கு சாப்பாட்டு நேரமுன்னு சொல்ல வந்தேண்டா சோமாறி” என்று சொல்லப்போனான். தமிழ்ச்செல்வி தன் கதையை மீண்டும் தொடரப் போவதைப் பார்த்து வாயடைத்தான். எங்கோ ஒரு ரயிலில் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து ஏதோ உறவினர் வீட்டில் இருப்பது போல், அவள் சொன்னாள். சோகக் கதையைச் சொல்லிக் கொண்டே போனாள்.

"இன்ஸ்பெக்டர் என்னை நெருங்கி வந்தார். ஏட்டய்யா எதுவுமே நடக்காததுபோல், அப்படி ஏதும் நடந்தால், அதைப் பார்க்கக்கூடாது என்பதுபோல் அவசர அவசரமாக வெளியே புறப்படப் போனார். நான் பயந்து போனேன். உடம்பெல்லாம் ஆடியது. இன்ஸ்பெக்டரைக் கையெடுத்துக் கும்பிடக்கூடப் போனேன். அவரோ ஒரு கண்ணில் குரூரத்தையும், இன்னொரு கண்ணில் ஏதோ ஒரு ஆசையையும் வைத்திருப்பவர்போல், என்னை தொடக்கூடிய இடத்திற்கு வந்துவிட்டார். திடீரென்று எனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/78&oldid=588349" இலிருந்து மீள்விக்கப்பட்டது