பக்கம்:நிழல் முகங்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சு. சமுத்திரம்

குள்ளே ஒரு மாறுதல். பாரதியின் புதுமைப்பெண் என் மனதுக்குள் ரூபம் பெற்றாள். நெஞ்சிலே உருப்பெற்று கண்களில் ஜோதி ஆனாள். பாரதிதாசனின் தமிழச்சி, முகத்திலே உருவமானாள். நான், இன்ஸ்பெக்டரை நேருக்கு நேராய்ப் பார்த்து "நீயாச்சி. நானாச்சு." என்பது மாதிரி கண்ணோடு கண்ணை மோதவிட்டேன். திடீரென்று அந்த இன்ஸ்பெக்டர் பின் வாங்கினார். இப்படி நடந்து கொள்ளும் பல இன்ஸ்பெக்டர்களுக்கு, ஏற்பட்ட கதி, அவன் நினைவுக்கு வந்ததோ அல்லது இன்னும் இருட்டவில்லை என்ற யதார்த்த எண்ணமோ, ஆசாமி, லெப்ட் ரைட் போடாக் குறையாகப் பின்வாங்கினார். அதே சமயம், ஏதோ தர்மத்துக்கு என்னை விட்டு விட்டதுபோல், இருக்கைக்கு அருகே சென்று, என்னை முறைத்தபடியே லத்திக் கம்பை உருட்டியபடியே உட்கார்ந்தார்.

எனக்கு, காவல்துறையினரின் சதி புரிந்துவிட்டது. என் பெரிய மாமாவின் சட்டைப் பைக்குள், இந்தப் போலீஸ்காரர்கள் போய் விட்டார்கள். எங்கள் பணத்தை வைத்தே, அவர் வீசிய வசிய மந்திரத்தில், கட்டுண்டார்கள். காசுக்கு விலை போனவர்களிடம், வேசிகூடப் பேசமாட்டாள். இன்ஸ்பெக்டர், கடிதங்களை மாமாவிடம் கொடுத்திருப்பார். ஒவ்வொரு கடிதத்திற்கும் ஒரு விலை விதித்திருப்பார். அடேடே. என் கடிதங்களுக்குக்கூட விலை இருக்குதா..? இவன் முன்னால் நியாயம் பேசுவது, ஆட்டுக்குட்டி ஒநாயிடம் பேசுவது மாதிரி.

நான், வெறுமனே வெளியே வந்தேன். வைத்தியலிங்கம், என்னை நோக்கி நடந்தபோது, நான் கூச்சத்தோடு ஒதுங்கினேன். பிறகு, அந்த இன்ஸ்பெக்டரின் அருவெருப்பான வார்த்தைகளை உதாசீனம் செய்வதாய்க் காட்ட விரும்பி, அவன் விரல்களைப் பிடித்துக்கொண்டேன். ஆனாலும் எந்த விவரத்தையும், அவனிடம் சொல்லாமல் மழுப்பிவிட்டேன். உண்மையைச் சொல்லி இருந்தால், அவன் கொலைகாரனாகி இருப்பான். அல்லது இன்ஸ்பெக்டரிடம் அவன் ஏதோ கேட்கப் போய் இறுதியில் எங்கோ நடந்த கொலைக்கோ அல்லது கொள்ளைக்கோ அவன் சுமை தாங்கியாக மாறிப் போவான். ஆனாலும், அவன் புரிந்து கொண்டான். "இந்தச் செறுக்கி மவன்களே இப்படித்தான் அண்ணி. ஏட்டு பெரியப்பன் வீட்டுக்கும், பெரியப்பன் இங்கேயும் நடமாடும்போதே எனக்குத் தெரியும்" என்றான்.

ஒருவார காலம், சின்ன மாமா வீட்டுக்குள்ளேயே, முடங்கிக் கிடந்தோம். பெரிய மாமா வீட்டில் சிரிப்பும் கும்மாளமும் தினசரி நிகழ்ச்சிகளாயின. அவற்றை விமர்சித்து நடுல மாமா வீட்டில் திட்டுக்கள். திருடன். தீயவன் என்ற பட்டங்கள். ஒம்ம தாய் மாமா வேல்மயில் அனுப்புன சொத்து பத்தை, ஒண்ணன் மட்டுமே எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/79&oldid=588351" இலிருந்து மீள்விக்கப்பட்டது