பக்கம்:நிழல் முகங்கள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI

ஒன்றிற்கு, சென்னை வானொலி நிலைய செய்தி ஆசிரியர் என்ற முறையில் சென்றிருந்தேன். திரு. விவேகானந்தனுடன் அப்போது அதிகமாகப் பேசவில்லை. ஆனாலும், உங்களின் இந்தக்கதை மட்டும் ஏனோ சரியாக வரவில்லை என்று ஏமாற்றம் கலந்த இனிமையோடு குறிப்பிட்டார். ஆனாலும், நான் தொடர்கதைகள் அதிகமாக எழுதியதில்லை. ஒருவேளை, நானும் வழக்க மான மசாலா பாணியில் எழுதுகிற எழுத்தாளன் என்று நம்பி, அவர் என்னை எழுதச் சொல்லியிருக்கலாம். என்றாலும், கதையை நிறுத்தச் சொல்லாமல், எழுதுகிற வரைக்கும் எழுதட்டும் என்பதுபோல் பல்லைக் கடித்துக் கொண்டிருந்த ஆசிரியர் திரு. விவேகானந்தன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக இதைப் போன்ற தொடர்கதையை இங்குள்ள வணிகப் பத்திரிகைகளில் எழுதமுடியாது. இலக்கியப் பத்திரிகைகள் வெளியிட்டால், இதற்கே அவைகளுக்கு காகிதம் போதாது.

இந்த "தமிழ்நேசனில், எனது தொடர்கதை பற்றி கருத்துத் தெரிவிக்கும் படி ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தேன். சுமார் நூறு கடிதங்கள் வந்திருக்கும். இப்போது தேடிப் பார்த்ததில் பதினைந்து கடிதங்களே கிடைத்தன. எஞ்சிய கடிதங்கள் பைலாக்கப்பட்டு, அந்த பைல் பரணுக்குள் போய்விட்டது. பரண் இருக்கிறது, பைல் இல்லை. அன்பைச் சுமந்து வந்த அந்தக் கடிதங்களை போற்றிக் காக்க தவறிவிட்டதற்காக வருந்துகிறேன். இந்தக் கடிதத்திலும், ஒரு எழுத்தாளர், தமிழக எழுத்தாளர்கள், மலேசிய எழுத்தாளர்களின் வயிற்றில் மண்ணைப் போடும்படி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வற்றை மையமாக வைத்து, என்னைப்போல் எழுதுகிறார்கள் என்று குற்றஞ் சாட்டியிருந்தார். இந்தத் தொடர்கதையையும் அவர் படிக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். இந்தக் கடிதத்தையும், அதற்கு நான் வழங்கிய காரசாரமான பதிலையும் பிரசுரிக்கலாம் என்று நினைத்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இலக்கியச்சூழலை எங்களது கடிதங்கள் பிரதிபலிக்கும் என்பதற்காக வெளியிடத் திட்டமிட்டேன். ஆனால், இப்போதைய இலக்கியச்சூழல், இங்கே மட்டுமல்ல, அங்கேயும் மாறி இருக்கிறது என்பதால், அந்தக் கடிதத்தை பாதுகாத்து வருகிறேன். இதனாலேயே இன்னொரு மலேசிய நாளிதழ், தொடர்கதை கேட்டபோது மறுத்துவிட்டேன். சரி. கதைக்கு வருவோம்.

இந்தப் படைப்பில், ரயில்வே தொழிலாளர்கள் குறிப்பாக, தாழ்நிலையில் உள்ளவர்கள், அந்த ரயில் பயலை, சொந்த மகன்போல் பராமரிப்பதைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். அந்தப் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தது, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ராணுவ இளைஞன். இவரைச் சொல்லி, இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பண்புள்ள பெரும் பான்மையான வீரத் தோழர்களை கொச்சைப் படுத்தலாகாது என்று, இந்த ராணுவவீரன் செய்த மேற்கொண்ட தகாத முயற்சிகளை, ஒரு அப்பாவி சீனிவாசன் தோளில் சாய்த்துவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/8&oldid=588143" இலிருந்து மீள்விக்கப்பட்டது