பக்கம்:நிழல் முகங்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 67

அனுபவிக்கிறதாம்” என்று நடுல அத்தை, புருஷனை ரேக்கி விடுவாள். பதிலுக்குப் பட்டைச் சாராயத்தோடு நிற்கவா இல்ல பட்டாக் கத்தியையும் எடுக்கவா" என்று நடுல மாமா பெரிய மாமா வீட்டுக்குப் கேட்கும்படி போதையில் உளறுவார்.

"சின்ன மாமா மனைவி, சொந்தமாய் இருந்த புஞ்சை நிலத்தில் பாடுபட்டுவிட்டு, கூலி வேலைக்கும் போகிறவள். மாமாவும் வாடகை வண்டி அடிப்பார். கூலிக்கு ஏர் உழப் போகிறவர். வைத்தியலிங்கம், அப்பா, அம்மா பணிகளைச் சேர்த்து செய்பவன். சில சமயம், மலைக்குப்போய் விறகு வெட்டி, அதைக் கோணச் சத்திரத்தில் விற்றுவிட்டு, வீட்டுக்கு எட்டோ பத்தோ கொண்டு வருபவன். இப்படிக் அந்தக் குடும்பத்தில் எல்லோரும் இயங்கிக் கொண்டிருக்கும்போது, அம்மாவால் சும்மா இருக்க முடியல. என்னால் சமையல் வேலையைக் கவனிக்க முடியும்; ஆனால் மாமாவோ, மைத்துனனோ சாயங்காலம் வந்து காசு கொடுத்த பிறகு தான். அடுப்புக்குச் சூடு வரும். அப்போது அத்தை என்னைத் தடுத்து விடுவாள். நான் குற்றவுணர்வில் தவித்தேன். சின்னமாமா குடும்பத்தில் ஒட்டுண்ணியாய் இருப்பதை விடலாம் போலிருந்தது."

"இந்தச் சமயத்தில் அம்மாவும் என்னை நோகடித்து விட்டாள். சின்ன மாமாவுக்கு, இரண்டு பசு மாடுகள். அத்தை கூலி வேலைக்குப் போய்விட்டுத் திரும்பும்போது, அதுகளுக்குப் புல் கொண்டு வருவாள். ஒரு சுமைப் புல்லில், அந்த வாயில்லா ஜீவன் களுக்கு வயிறு தேறவில்லை. அம்மா, இதைப் புரிந்து கொண்டாள். மாமாவின் மாடுகளை, மானாவாரி இடங்களுக்குத் தனியாகப் பற்றிக் கொண்டு போனாள். பிறகு மாடு மேய்க்கும் மனிதர்களோடு சேர்ந்து போனாள். இந்தத் தொழிலில் அம்மா ஊர்மாடுகளையும் கவனித்துக் கொள்கிறாள். இதற்காக வீட்டுக்கு இருபது ரூபாயாம். மாமா தடுத்துப் பார்த்தார்; திட்டிப் பார்த்தார். அம்மா கேட்கவில்லை."

"அம்மாவின் இந்தக் கோலத்தைப் பார்த்துவிட்ட பிறகு, நான் எப்படி நடந்திருப்பேன்னு சொல்ல வேண்டியதில்லை. தூக்குப் போட்டுச் சாகப்போனேன். அதுக்கு ஒரு நல்ல கயிறு கூடக் கிடைக்கலே, என் அம்மாவை - கோலாலும்பூரில் எங்கே போனாலும் காரில் போன என் தாயை, கோலாலும்பூரில் இருந்து இந்தியாவிற்கு விமானத்தில் வரும் என் தாயை, மாடு மேய்ச்சியாகப் பார்க்கப் பார்க்க எனக்கு பார்வையே தேவையற்றதுபோல் தோன்றியது. எனக்கோ வயல்வேலை செய்ய முடியவில்லை. ஒரு தடவை நடுவதற்காகப் போனேன். சேற்றுக்குள் விழுந்ததுதான் மிச்சம். என் அம்மா, எனக்கும் சேர்த்து மாடு மேய்த்தாள். ஒருவேளை, அந்த அப்பாவி மாடுகளைப் பார்த்து, மனிதரிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/80&oldid=588353" இலிருந்து மீள்விக்கப்பட்டது