பக்கம்:நிழல் முகங்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சு. சமுத்திரம்

பட்ட கஷ்டங்களைச் சொல்லாமல் சொன்னாளோ என்னவோ. இதைப் பார்த்த என் பெரிய அத்தை "இவளுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்." என்றாளாம். நடுல அத்தையோ "நம்ம மாடுகளையும் மலேயாக்காரிகிட்டே விடு" என்று மகனைப் பார்த்துச் சொன்னாளாம்."

“எனக்கு ஒரு சந்தேகம். அம்மா இப்படி மாடு மேய்த்து அண்ணன்களை அவமானப்படுத்தி பழி வாங்குகிறாளோ... இல்லவே இல்லை. அம்மா, அப்படிப்பட்டவள் இல்லை. ஒரு காலத்தில் அம்மாவை, ஒரு கண் போட்டுப் பார்த்த ஊரார், இப்போதும் இன்னொரு கண் போட்டுப் பார்க்கிறார்கள். மலேயாக் காரி, மாடு மேய்ச்சியாகி விட்டாள். அம்மா அப்போது வி.ஐ.பி, இப்போதோ வெறும் ஐ.பி. நான், அம்மாவிடம் ஒரு தடவை மாடு மேய்ப்பதை நிறுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அவள் பதில் பேசாமல் இருந்தாள். அம்மா மாடு மேய்ச்சியான பிறகு, அவளை முழுமையாகப் பார்க்கமுடியாமல், முகத்தைக் திருப்பிக்கொள்ளும் நான், இப்போது அம்மாவின் முகத்தைத் திருப்பிப் பார்த்தேன். அய்யோ கடவுளே. அம்மாவின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. கண்கள் மட்டும் துடித்தன. வாய் மூடிக் கிடந்தது. வாழ்ந்து கொண்டே செத்தவள் மாதிரியான தோரணை. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு அசைவைக் காட்டும் முகம், இப்போது ரப்பர் மாதிரித் தோன்றியது. குடிசைத் தொழிலில் தயாரான ஏதோ ஒரு பெண் பொம்மைக்கு, அசைந்தாட பேட்டரி வைத்த மாதிரி ஆகிவிட்டாள். அழுதழுது அழுகையைத் தாண்டி விட்டாளோ. நினைத்து நினைத்து நினைப்பற்றுப் போய் விட்டாளோ அம்மா, என்னைக்கூட மகளென்று அங்கீகரிக்காதது போல், பார்த்தாள்."

"நான், ஏதோ வேற்று மனுவி போலவும், அந்த மாடு மேய்ச்சியின் மகளல்ல என்பது போலவும் பார்த்தான். சாயங்காலம் மாடுகளைக் கட்டிவிட்டு, அந்த மாடுகளின் முதுகிலேயே நின்றபடி சாய்ந்து தூங்குவாள். நான் அந்தப் பக்கமாய் போய் அம்மா என்றால்கூட, அவளிடம் ஒசையிருக்காது. உடல் இயங்கியது. ஆனால் உள்ளம் இயங்கவில்லை. அதாவது உணர்வு பூர்வமாகச் செத்துவிட்டாள். இனிமேல், நான், ஒருவேளை செல்வமும் செல்வாக்குமாகி அம்மாவின் முன் நின்றாலும் அவளால் பழைய நிலைக்கு வர முடியுமா என்பது சந்தேகம். என் அம்மா வரமாட்டாள். அவள் மாடு மேய்ச்சியாகிவிட்டாள். மலேயாக் காரியாய் ஆக மாட்டாள். ஆகவே மாட்டாள். பாவிகள் அவளைக் கொல்லாமல் கொன்றுவிட்டார்கள் கடவுளே...கடவுளே. எனக்கு எதுவும் வேண்டாம். என் அம்மாவை எனக்கு அம்மாவாய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/81&oldid=588355" இலிருந்து மீள்விக்கப்பட்டது