பக்கம்:நிழல் முகங்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 69

கொடு. அந்த மாடு மேய்ச்சியை, மலேயாக்காரியாய் மாற்றிக் காட்டு. அப்போதான் நீ கடவுள். நீ இருப்பதாய் அர்த்தம்."

நவாப்ஜான், ஆறுதல் கூறினான். "கடவுள் இருக்காரோ. இல்லியோ. உன் அம்மா பழைய நிலைக்கு வருவாம்மா. நான் சொல்றதை நம்பு தங்கச்சி. அல்லா கைவிட மாட்டார்."

தமிழ்ச்செல்வியின் கைகளை உணர்ச்சி வசப்பட்டு பிடித்துக் கொண்ட நவாப்ஜான், பிற்கு தன் கண்களைத் துடைத்துக் கொண்டான். எல்லோரும் அவள் சொன்ன தகவலைத் தாங்க மாட்டாது, ஜன்னலுக்கு வெளியே பார்த்தார்கள். அந்த ரயில் பயல், அவள் தோளிலே கை போட்டான். பிறகு, அவள் கண்களைத் துடைக்கப்போனான். அதனால் இயல்பாக முகத்தைத் திருப்பிய தமிழ்ச்செல்வியின், கண்கள் கொட்டின. ஆனாலும் அவள் நிதானத்திற்கு வந்து, முகத்தை முந்தானையால் துடைத்தபடி, இப்போது போர்க்குரலில் பேசினாள்.

"என் அம்மாவை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை சும்மா விடுவது, நான் என் அன்னைக்கும். நீதிக்கும் செய்யும் துரோகமாக நினைத்தேன். உலகத்திலேயே மிகப் பெரிய கொடுமை, நியாயமான உணர்வுகளுக்கு வெளிப்பாடு கிடைக்காமல், இருப்பதுதான். அதோடு, இந்தக் கொடுமைகளுக்கு எதிராக, நான் போர் தொடுக்காத நிலையில், நானும் அம்மாவைப்போல் ஆகிக் கொண்டிருந்தேன். நல்லவேளையோ அல்லது கெட்ட வேளையோ, வைத்தியலிங்கம் என் காதில் ஒரு சேதி சொன்னான். எங்கள் கிராமத்துக்காரர் - சென்னையில் புகழ்பெற்ற வக்கீலாம். நானும் அவரைப் பற்றிக கேள்விப்பட்டிருக்கிறேன். பெயர் முத்துச்சாமி. ஊரில் அவருக்கு நல்ல பெயர் இல்லை. இதுக்கு அவர் காரணமாக இருப்பாரா என்பது சந்தேகம். ஏனென்றால், எங்க ஊர்க்காரங்க, வினோதமானவங்க சென்னையிலோ அல்லது டில்லியிலோ, வேலை பார்க்கும் பட்டதாரிகள், கிராத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளம் பட்டதாரிகளுக்கு வேலை வாங்கிக் கொடுக்க வில்லையானால், அவர்கள் மனிதர்களே இல்லை என்பார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுடைய சொந்தக்காரர்களை சொத்துப் பத்துக்களில் துண்டி விடுவார்கள்."

"இதன் காரணத்தால் வெளியே வேலை பார்க்கும் பலர் தங்கள் பெயரில் பட்டாவாக உள்ள நிலத்தைக்கூட விற்க முடியாது. இப்படி இந்த வக்கீலுக்கும் நிலவகையில் சிக்கல். அண்ணன் தம்பிகள், ஆளுக்கு ஒரு துண்டாகப் போட்டுக் கொண்டார்கள். 离* வக்கீல் முத்துசாமி விடவில்லை. ஊருக்கு வந்து, காவல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/82&oldid=588358" இலிருந்து மீள்விக்கப்பட்டது