பக்கம்:நிழல் முகங்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 க. சமுத்திரம்

பார்த்தேன். வீட்டுக்குப் போனால் ஆபீசுக்கு வரும்படியும், ஆபீஸ் போனால் வீட்டுக்கு வரும்படியும் இழுத்தடித்தார். ஒருநாள், அவரை வலுக்கட்டாயமாகச் சந்தித்தேன். என் பெரிய மாமா என்னை எப்படிப் பார்த்தாரோ, அப்படிப் பார்த்தார். எதிரி வக்கீலின் கட்சிக்காரரைப் பார்ப்பது போலவே பார்த்தார்."

இ2

அந்த ரயில் இப்போது இருட்டைக் கிழித்துக்கொண்டு எங்கோ தொலைவில் தெரிந்த வெளிச்சத்தை இலக்காக வைத்து ஒடுவதுபோல் தோன்றியது.

அங்கிங்கு என்று சொல்லமுடியாத இருளோட்டம். சுற்றிலும் கருமையின் மொய்ப்பு. காடுகளும், மலைகளும், காரிருளில் உருவங்களை இழந்து நின்றன. அந்த இருளிற்கு இருள் சேர்த்தன. ஆனாலும், ஆங்காங்கே வெளிச்சத் திட்டுக்கள். மின்மினிப் பூச்சிகள் மாதிரியான ஒளிப்பானங்கள். அடிக் கருத்தாலும், மேல் வானத்தில் பல்ப் வெளிச்சங்கள் மாதிரி, கருமேகங்களுக்கு இடையே நட்சத்திரங்கள் கண் சிமிட்டின. அந்த எஸ். 11 பெட்டியில் தவிர இதரப் பெட்டிகளில் எந்த நடமாட்டமும் இல்லை. தூங்கி விட்டார்களோ அல்லது மையிருளில் மனமும் அடைபட்டதோ என்னமோ.

தமிழ்ச்செல்வி, மஞ்சள் வெயில்போல் வீசிய பல்ப் வெளிச்சத்தில் தனது சோகக்சுமையைப் பகிர்ந்து கொண்டிருந்தாள்.

"முத்துசாமி வக்கீல் என்னை உட்காரச்கூடச் சொல்லவில்லை. இவ்வளவுக்கும் அவர், எனக்குப் பங்காளி முறை வேண்டும். பெரியப்பாவோ, சித்தப்பாவோ. தாத்தா முறையோ என் அப்பா பிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்த முறையிலாவது என்னை உட்காரச் சொல்லியிருக்கலாம். இவ்வளவுக்கும், நான் அவருக்குக் கடிதம் எழுதிப் போட்டுத்தான் வந்தேன். அவ்ர் முகத்தில் தோன்றிய ஏதோ ஒருவித அந்நியத் தன்மையில், சூட்டைக் கண்டு, நான் நின்றபடியே, அவரைப் பார்த்தேன். அவரோ, நான் அங்கே இல்லாததுபோல் அனுமானித்து, யார் யாருக்கோ டெலிபோன் செய்தார். பார்க்க வந்த பல்வேறு மனிதர்களிடம் அவர்களை உட்கார வைத்தும், நிற்க வைத்தும், பணம் கொடுத்தும், பணம் வாங்கியும், கோபப்பட்டும், சாந்தப்பட்டும், பேசியும் பேசாமலுமாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/85&oldid=588366" இலிருந்து மீள்விக்கப்பட்டது