பக்கம்:நிழல் முகங்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 73

நேரத்தைச் செலவழித்தார். இது அவருடைய டெக்னிக் போலும். எனக்கு, கால்கூட வலிக்கத் துவங்கிவிட்டது. லேசாக இருமினேன். அவர், உடனே என் மீது எரிந்து விழப் போகிறவர்போல் பேசினார்."

"இந்த பாரும்மா. ஒன் பெயரென்ன தமிழ்ச்செல்வியா..? சொல்லுறதைக் கேள். தமிழ்ச்செல்வி. கோர்ட் வழக்குல்லாம் முடியாது. உன்கிட்டே பேசின. பிறகு நான் இங்கே வந்து, சட்டப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தேன். ஒங்கப்பா. தாத்தா வந்தாக் கூட முடியாது. சட்டம் அப்படி ஒன் பெரிய மாமா கையில காலுல விழுந்து அவர் தர்றதை வாங்கு இல்லின்னா நஷ்டம் உனக்குத்தான். அப்புறம் வேற ஏதாவது விஷயம் உண்டா? எனக்கு நிறைய கேஸ் வேலை இருக்குது. நீயே பார்க்கத்தானே செய்யுறே."

"நான் அவர் போகச் சொல்லுமுன்னாலேயே புறப்பட்டு விட்டேன். என் விதியை நொந்து கொண்டேன். இல்லை. கோபித்துக்கொண்டேன். இருளில் தவிக்கும் எனக்கு, அவ்வப் போது ஒளித் தூறலைக்காட்டி, அது காட்டும் இடத்தை நான் அடைந்தவுடனேயே அந்த ஒளிக் கீறல்களை அனைத்துவிடும் விதியைத் திட்டித் தீர்த்தேன். ஆனால் விதியோ, அந்த ஒளியை அணைக்காமல் சிறிது, அப்புறப் படுத்தியதுபோல் தோன்றியது."

"சென்னைக்கு வந்த நான், வட சென்னையில் என் தாத்தாவுக்கு வேண்டியவர் வீட்டில்தான் தங்கினேன். தாத்தாவும், அப்பாவும் சென்னைக்கு வரும்போது, இந்த வீட்டில்தான் ஒரிரு நாட்களுக்கு நாங்கள் தங்குவோம். இவ்வளவுக்கும் அவர்கள் எங்கள் சாதியில்லை; எங்கள் ஊரும் இல்லை. எப்படிப்பட்ட பந்தம் ஏற்பட்டது என்பது எனக்கே தெரியாது. ஆனாலும், அந்த வீட்டில் இருக்கும் பரந்தாமன் தாத்தா, நேற்றுகூட என் தலையை வருடிக் கொடுத்தார். அவர் மகனும், மருமகளும், என்னை சொந்த மகள் மாதிரியே நடத்தினார்கள். நான் பட்ட கதையைச் சொன்னதும், துடிதுடித்துப் போனார்கள். எவ்வளவு நாள் வேண்டுமானாலும் நான் அவர்களோடு இருக்கலாம் என்றார்கள். வழக்கறிஞர் என்று சொல்லப்படும் முத்துசாமி நடந்து கொண்ட விதத்தை நான் சொன்னதும், தாத்தாவின் மகன் சுப்பாராவ் மாமா கொதித்துப் போனார். துறைமுகக் காண்டிராக்டர் அவர் என்னை ஒரு வக்கீலிடம் கூட்டிப் போனார். நான் சொன்னதைக் கேட்டு, நீட்டிய கடிதங்களைப் படித்த அந்த வக்கீல், என் மாமா மீது மோசடி செய்ததாகக் கிரிமினல் வழக்கும், போடலாம் என்றார். அதற்கு முதல்படியாக சொத்துக்களை ஒப்படைக்கும்படி நோட்டீஸ் அனுப்பலாம் என்று சொன்னபடியே "என்னய்யா அந்த ஆளு காசு கொடுத்தானா" என்று குமாஸ்தாவைப் பார்த்துக் கேட்டார். நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/86&oldid=588369" இலிருந்து மீள்விக்கப்பட்டது