பக்கம்:நிழல் முகங்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சு. சமுத்திரம்

எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் அவரைப் பார்த்தபோது "இருநூறு ரூபாய் இப்போதைக்கு கொடுங்கள்” என்று வாங்கிக்கொண்டார்."

"பிறகு, மறுநாள் வரும்படி சொல்லிவிட்டார். ஒருவார காலம், அவர் அலுவலகத்திற்கு நடையாய் நடந்தேன். எப்படியோ பெரிய மாமாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விட்டார். அவரது பதிலுக்காகக் காத்திருந்தேன். ஒரு மாதம் உப்புச் சப்பில்லாமல் ஓடியது. நோட்டீஸ் திரும்பி வரவில்லை. மாமா அதை வாங்கிக் கொண்ட தற்காக அடையாளக் கார்டு வந்தது. அப்புறம் மாமாவின் பதில் நோட்டீஸ் சாவகாசமாக வந்தது. இந்த நோட்டீஸை யார் அனுப்பியது தெரியுமா..? முத்துசாமி. வழக்கறிஞர் முத்துசாமி. கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்கும் என்றும், என் மாமாவுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை வாங்கிக் கொடுப்பதாகவும் சபதம் போட்ட அதே அந்த வீர வக்கீல்தான். இப்படிப்பட்ட மனிதர் எப்ப்டி வக்கீலாக இருக்கலாம்.? என்று நான் என் வக்கீலிடம் கோபமாகக் கேட்டபோது, அவர் என் கேள்வியை அதிகமாக ரசிக்க வில்லை. நான் என்னமோ, அவரைத் திட்டுவதுபோல் அனுமானித்த படி வாயை உப்பியபடியே இருந்தார்."

'நானோ, நான் தங்கியிருக்கும் நட்பு வீட்டுக்கு சிரமம் கொடுக்கக்கூடாது என்று, பெரும்பாலான நேரத்தை, வழக்கறிஞர் அலுவலகத்திலேயே செலவழித்தேன். ஹோட்டல்களிலேயே சாப்பிட்டேன். மாமாமீது வழக்குப் போடுவதைத் தவிர, வேறு வழியில்லை. ஆனால், எனது வழக்கறிஞரோ, நாளை தள்ளிப் போட்டுக் கொண்டே போனார். இந்தச் சந்தர்ப்பத்தில் என் கையில் இருந்த பணம் குறைந்து கொண்டே இருந்தது. வழக்கறிஞரிடம் சற்றுக் கண்டிப்பாகவே பேசி விட்டேன். அவர், லேசாய் கோபப்பட போனார். பிறகு சுப்பாராவ் மாமா சிபாரிசு செய்த கிளையண்ட் என்பதால், என்மீது ஏவப்பட்ட கோபத்தை புன்முறுவலாக்கினார். முந்தா நாள் வரச்சொன்னார். "அப்பிட விட்" - வழக்குத் தொடுக்கும் மனுவைத் தயாரித்துவிடலாம் என்றார். அதற்கு மறுநாளே, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிடலாம் என்றும் தெரிவித்தார். எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. சுப்பாராவ் மாமாவும் விடப்படாது' என்றும் காலையில் விஷ் யூ பெஸ்ட்' என்று சொல்லி என்னை வழியனுப்பினார்."

"நான், காலையிலேயே புறப்பட்டேன். எ ன் வக்கீலின் அலுவலகம், உயர்நீதிமன்றக் கட்டிட வளாகத்திற்குள் ஒரு மாடிக் கட்டிடத்தில் இருந்தது. அங்கே போவதற்காக, சென்ட்ரலுக்குப் பஸ்ஸில் வந்தேன். கடிதங்களைக் கொண்ட ஜோல்னா பையைத் தோளில் போட்டுக் கொண்டேன். ரயில் நிலையம் ஒரமாக இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/87&oldid=588371" இலிருந்து மீள்விக்கப்பட்டது