பக்கம்:நிழல் முகங்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 75

பஸ் நிலையத்தில் இறங்கி, தெற்குப் பக்கமாய் நடந்து, கிழக்குப் பக்கமாய் நடக்கப்போனேன். சாலையைக் கடப்பது சிரமமாகத் தோன்றியதால், மேற்குப் பக்கமாக நடந்து, சாலைக்கு அடியில் போடப்பட்டுள்ள பாதாளப் பாதையின் படிக்கட்டுக்களில் இறங்கினேன். செருப்புச் சத்தம் கேட்டு நிமிர்ந்தபோது, எனக்கு முன்னாலும், பின்னாலும் இரு பக்கமும் நாலைந்து பேர் என்னைச் சூழ்ந்து நடந்தார்கள். அவர்களில் ஒருத்தன் நல்ல பழக்கம் அல்லது கெட்ட பழக்கம். பெரிய மாமாவின் மகன் தாமரைப்பாண்டி. இன்னொருத்தன் பண்ணையார். மூன்று பேர் ஒருவேளை மெட்ராஸ் ரெளடிகளாக இருக்கலாம். நான் வீறாப்பாக அவர்களைப் பார்த்தபோது, தாமரைப் பாண்டி "வழக்காடி போடப்போறே.? அதையும் பார்த்துடலாம். கூச்சல் போட்டே ஒரே வெட்டு. மரியாதையா இப்படியே நட" என்றான்."

'இதற்குள் ஒருத்தர் இடுப்பில் சொருகியிருந்த பாளை அரிவாளைச் சட்டையைத் துாக்கிக் காட்டினார். ஒருத்தன் பிச்சுவாச் கத்தியை எடுத்துக் காட்டினான். எனக்கு உயிர் பயம் வந்தது. அந்தப் பயத்தில், கூச்சல்போட முடியவில்லை. சொத்தும் வேண்டாம். சுகமும் வேண்டாம். உயிர் பிழைத்தால் போதும். என்பது மாதிரியான பயம். அந்த பாதாள்ப் பாதையிலோ ஆள் நடமாட்டம் அதிகமாக இல்லை. தாமரைப்பாண்டி எல்லோருக்கும் தெரியும்படிச் சிரித்தபடியே பேசாததுபோல் பேசினான்."

"மொதலில் பைக்குள்ள இருக்கிற லட்டருங்களைக் கொடுடி. கொடுக்கிறியா..? இல்ல பிச்சுவாக் கத்திதான் பேசனுமா..?”

"நான், என் ஜோல்னா பையின் ஜிப்பைத் திறப்பது மாதிரி, பாவனை செய்தேன். லேசாகக் குனிந்தேன். இப்போது இரண்டு பேருக்கு இடையே ஒரு சின்ன இடைவெளி கிடைத்தது. உயிரைக் காப்பாற்றவேண்டும் என்பதைவிட, அந்தக் கடிதங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்தில் எப்படித் தப்பித்தேனோ..! எனக்கே தெரியாது. சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முகப்பில் நின்றபடி மூச்சுவிட்டபோது, எதுவும் நடக்காததுபோல் என்னை நோக்கி இருவர் நடந்து வந்தார்கள். மற்றவர்கள் எந்தப் பக்கம் நின்றார்களோ. நான் ரயில் நிலையத்திற்குள் ஓடினேன். அங்கே நின்றால் ஆபத்து என்பதை உணர்ந்து, வடக்கு நோக்கி நின்ற ரயிலில் ஏறிவிட்டேன். ஏதோ ஒரு வேகம் என்னை நானே மறைத்துக் கொண்டேன். நல்லவேளையாக நான் ஏறிய உடனேயே ரயிலும் ஓடியது. டிக்க்ட் பரிசோதகர் ஏதாவது கேட்பாரே என்ற எண்ணம்கூட எனக்கில்லை. எங்கேயாவது போனால் சரிதான் என்ற எண்ணம். என் வக்கீல் வேறு ஏனோ தானோ என்று இருந்ததால், அந்த ரயில் கொண்டுபோகும் எந்த இடத்திற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/88&oldid=588375" இலிருந்து மீள்விக்கப்பட்டது