பக்கம்:நிழல் முகங்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 க. சமுத்திரம்

போய்த் தொலைந்தால், சரிதான் என்று எண்ணியபடியே அந்த ரயிலுக்குள்ளேயே இருந்துவிட்டேன். துக்கச் சுமை, தூக்கச் சுமையாகியது. இரவு வந்தது எனக்குத் தெரியவே தெரியாது."

"மறுநாள் துக்கக் கலக்கத்தில் பல ரயில் நிலையங்களைப் பார்த்தேன். நாக்பூர் வந்த பிறகுதான், சுயநினைவு ஏற்பட்டது. தாமரைப்பாண்டிக்குப் பயந்து விடக்கூடாது என்று எனக்குள் ஒரு வைராக்கியம் ஏற்பட்டது இந்தக் கொலைவெறி மிருகங்களைப் பற்றியும் கோர்ட்டில் சொல்லவேண்டும் என்று ஒரு வைராக்கியம் பிறந்தது. நாக்ப்பூரில் இறங்கினேன். சென்னைக்குப் போகும் ரயிலை விசாரித்துத் தெரிந்தபடி, நான் நடந்தபோது, "ஏய்" என்ற சத்தம் கேட்டுத் திரும்பினேன். பழையபடியும் ஒரு பாதாளப் பாதையில் வழிமறித்த அதே அந்தக் கும்பல், என்னைச் சுற்றிச் சூழ்ந்து இருப்பதைப் பார்த்தேன். தாமரைப்பான்டியைத்தான் &fT ☾ வில்லை. ஒருவேளை, என்னை அடையாள்ம் காட்டியதுடன் சென்னையிலேயே நின்று விட்டானோ என்னவோ. நான் அந்தக் கும்பலுக்கு இடையே நடந்து கொண்டிருந்தேன். என் முதுகில், இடுப்பில், கூர்மையாக, ஏதோ இடித்துக் கொண்டிருந்தது. "சத்தம் போட்டே. குளோஷ்" என்று ப்ேட்டை ரெளடி பிச்சுவாக் கத்தியால் இடுப்பில் லேசாகக் கூர் பார்த்தான்."

"நான் என்ன செய்வது என்று புரியாமல் விழித்தபோது, பிளாட்பாரத்தில் ஒரு பிரமுகருக்கு மலர்மாலை போடப்பட்டு, மரியாதை செய்யப்பட்டு வந்தது. அந்த மரியாதைக்குரிய மனிதரைச் சுற்றி, ஒரே கூட்டம், இதற்கிடையே எதிரே தள்ளு வண்டி. என்னைச் சுற்றிய கும்பல் லேசாய் பிரிந்தபோது. நான் அந்தக் கூட்டத்திற்குள் புகுந்து, இந்த ரயிலில் ஒரு பெட்டிக்குள் ஏறினேன். பின்னால் திரும்பினால் அந்தக் கும்பலும், நான் இருந்த பெட்டிக்குள்ளேயே ஏறியது. நான் பெட்டி பெட்டியாக உயிர்பிச்சை கேட்டு ஓடினேன். ஒடி ஒடி உங்ககிட்டேயே வந்துட்டேன். ஒங்க கிட்ட வந்ததால், இந்த ஒரு ராத்திரியாவது என் உயிர் பிழைக்கும்."

எ ல் லோரும் , அவளையே வைத்த கண் வைத் த படி பார்த்தார்கள். கூட்டுச் சோற்றைப் பிரிக்கப் போன தெலுங்குக் கிழவி, என்ன நினைத்தாளோ, அத்ை அப்படியே கூடைக்குள் வைத்துவிட்டாள். டில்லிப் பெண்கள் வாயடைத்தபடியே அவளைப் பார்த்தார்கள். ரயில் பயல், தனது மடியில் இருந்த ரூபாய் நோட்டைத் தொட்டுக்காட்டி, வெளியே புறப்பட எழுந்தான். அவளுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வரப்போகிறனாம். உட்னே, தமிழ்ச்செல்வி, அவன் கையைப் பிடித்து, இழுத்து, மடியில் உட்கார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/89&oldid=588379" இலிருந்து மீள்விக்கப்பட்டது