பக்கம்:நிழல் முகங்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VII

இந்த நாவலை எழுதுவதற்கு முன்னால், சில ஆயத்த Ga606566 மேற்கொண்டேன். அப்போது சென்ட்ரல் ர யில் நிலையத்தில் கண்காணிப்பாளராக இருந்த திரு. கனகசபாபதி அவர்கள், பண்புள்ள அதேசமயம் கண்டிப்பான நேர்மையான அதிகாரிகளுக்கு ஒரு முன் உதாரணம். அவர் மூலம் சில தகவல்கள் தெரிந்தன. அவருழ், அனாதையாக விடப்படும் குழந்தைகளை எடுத்து, உரியவர்களிடமோ அல்லது தக்கவர் களிடம் வளர்ப்புக் குழந்தைகளாகவோ ஒப்படைக்கும் அற்புத மனிதரான பிளாட்பார இன்ஸ்பெக்டர் மணியை, எனக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர் மூலமாகவே தனது அனுபவங்களை சொல்ல வைத்தார். இந்த மணி, அண்மையில் இறந்தபோது, எனக்கு தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, நானும் நோய்வாய்ப் பட்டிருந்ததால், என்னால் இறுதி அஞ்சலி செலுத்த இயலவில்லை. ஆனாலும், அவரது தோற்றமும் தொண்டும் என் இதஞ்சிலே நீங்கா இடம்பெற்று அவருக்கு ஒரு நிரந்தர அஞ்சலியாக நிலைத்து நிற்கிறது. தமிழக அரசின் சமூக நலத்துறைக்கும், நமது பிளாட்பார இன்ஸ்பெக்டர் மணிக்கும் நடந்த சண்டைகளில் ஒன்றை நாவலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

அந்த ரயில் பயலுக்கு எல்லாமாகிப் போனவர் சுந்தரம். இவரை நான் பார்க்க முடியவில்லை. ஆனால், இவர் இந்த பையனிடம் கொண்டிருக்கும் பாசத்தை, பலர் என்னிடம் எடுத்துரைத்தார்கள். இவருக்கு ஒரு குடும்பத்தை நானாகவே ஏற்படுத்திக் கொடுத்தேன். இவரது நிசமக குடும்பத்தைப் பற்றி எனக்குத் தெரியாது.

இந்தக் கதையில் வரும் கமலாகரன், ஒரு மெய்யான பாத்திரம். இலங்கையில், முதல் தடவையாக கலவரம் முழு வீச்சில் நடந்தபோது, இ.பி.ஆர்.எல்.எப். சார்பில் போராடி ஒரு கையை இழந்து சென்னைக்கு வந்த இளைஞர். அப்போது, சென்னை வானொலி நிலையத்தில், வட இலங்கைத் தமிழர்களை அமைதிப்படுத்தும் வகையில் ஒரு அரைமணி நேர நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இதில், அய்ந்தைந்து நிமிடம் மாலையிலும் காலையிலும் செய்திகளை ஒலிபரப்புவது எனது பொறுப்பானது. இதற்காக, பல இலங்கை சோ தர சோதரி களை செய்தி வா சிப்பாளர்களாக , பலரின் ஆட்சேபத்திற்கிடையே சேர்த்துக் கொண்டேன். இதனால், இவர்களின் வறுமைப் போகவில்லை என்றாலும், வயிறு அரைவாசியாவது நிரம்பியிருக்கும். இந்தக் கமலாகரன், இபி.ஆர்.எல்.எப். வரதராஜ பெருமாள் தலைமையில் மாநில அரசு அமைந்ததும், அங்கே சென்றார். யாழில், மாநில ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றிருக்கிறார். ஆனாலும், இப்போது அவர் உயிரோடு இல்லை. விடுதலைப்புலிகள், இந்தக் கமலாகரனை கொன்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த பண்பட்ட இளைஞருக்காக, சிலசமயம் மனதுக்குள் ஊமை அழுகை ஏற்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/9&oldid=588145" இலிருந்து மீள்விக்கப்பட்டது