பக்கம்:நிழல் முகங்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 77

வைத்துக் கொண்டாள். பலராமன் அவளிடம் பேசினான். கண் கலங்கி, பரிதாபத்தைப் பார்வையில் காட்டியபடியே பேசினான்.

"நீங்க தப்பு செய்திட்டிங்கம்மா. அந்தப் பசங்களை ஐஸாவா போக்குக்காட்டி நைஸா போலீஸ்ல பிடித்துக் கொடுத்திருக்கணும்."

நவாப்ஜான், பலராமன் தலையில் ஒரு போடு போட்டபடியே கத்தினான்.

"மூளை இருக்காடா. பல்ராமா. அந்தப் பொண்ணு என்ன சினிமா நடிகையா..? நடிக்கிறதுக்கு என்ன புத்தியடா ஒன் புத்தி."

"என் புத்தி கெடக்கட்டுண்டா சாய்பு. அந்தப் பசங்க நாம தூங்கும்போது இங்கே வந்து எதினாச்சும் செய்துடப்படாதே. அதுக்கு என்ன பிளான் வச்சிருக்கே? அதைச் சொல்லுடா மச்சான்'

“ஏண்டா நீ மட்டும் எழுபது கிலோ உடம்பை வச்சிருக்கே. நானு அறுபது கிலோ மாமிசத்தை வச்சிருக்கேன். மெக்கானிக் நாராயணன் அறுபத்தஞ்சு கிலோ, நம்மை மீறி அந்தப் பசங்களால வர முடியுமா. அப்படி வந்துட்டால், நாம உயிரோட இருக்கதுக்கு என்னடா மச்சான் அர்த்தம்..?”

"இல்லாட்டியும் நீ உயிரோட இருக்கதுல அர்த்தமில்லடா மச்சான்.” -

“டேய் டமாஷ் செய்யுறதுக்கு இதுவாடா சமயம். தங்கச்சியோடி கதையைக் கேட்ட பிறகும், டமாஷ் வந்தால். நீ என்னடா மனு ஷ ன்...?-க வலப்படாதம் மா... எங்க உயிர் போகுமுன்னால ஒரு பயலும் உள்ளே வர முடியாது. தைரியமாய் இரும்மா. ஒன் கதைதான் இந்த நாட்ல உள்ள ஏழை எளியவங்க கதைம்மா. நாம்தாம்மா ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவு. நான் இருக்கேன். பல்ராமன் இருக்கான். மெக்கானிக் நாராயணன் இருக்கார். கவலப்படாதம்மா"

தமிழ்ச்செல்வியின் மடியில் இருந்த ரயில் பயல், திடீரென்று எழுந்தான். அவளைப் பு:ார்த்துத் தன் தோளைத் தட்டிக் காட்டினான். உடனே, அவள் தன்னையறியாமலேயே சிரித்து விட்டாள். ஏதோ சிந்தனை வசப்பட்டிருந்த மெக்கானிக் நாராயணன் கோபமாகப் பேசினார்.

"நாட்ல நியாயமோ நீதியோ இல்லாமப் போயிட்டுப் பார்த்தியா...? பாவம் இந்தப் பொண்ணை என்ன பாடு படுத்தியிருக்காங்க பாரு. இந்தப் பொண்ணுக்கு இவ்வளவு நடந்த பிறகு நாம மனுஷங்கன்னு சொல்லிக்க நியாயமே இல்ல. தமிழ் நாடாம். தமிழாம். தமிழர்களாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/90&oldid=588383" இலிருந்து மீள்விக்கப்பட்டது