பக்கம்:நிழல் முகங்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சு. சமுத்திரம்

"அப்டி இல்லே அண்ணே. இதுக்குல்லாம் நாடோ, மொழியோ காரணமில்லை. சமூக அமைப்புதான் காரணம். நம்மோட சமூக அமைப்பு ஒரு வியாபாரத்தனமான அமைப்பு இப்படி மலேசியாவில் இருந்தாலும். அங்கேயும் இப்படித்தான் இருக்கும்."

பலரும் பலவிதமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பேச்சு தன்னைப்பற்றி மையம் கொண்டிருப்பதைக் கண்ட தமிழ்ச்செல்வி, நெகிழ்ந்தாள். இப்போதும் அவளுக்கு அழுகை வந்தது. ஆனால், அது வேறுவிதமான அழுகை வித்தியாசமான அழுகை, அப்போது பழைய சீனிவாசன், புதிய வேகத்தில் வந்தான். அவன் இருக்கையைக் கொடுப்பதற்காகத் தமிழ்ச்செல்வி எழுந்தபோது, அவன் "இருக்கட்டும் இருக்கட்டும்" என்று. சொன்ன படியே எதிர்ப் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு, காஞ்சனாவையே பார்த்தான். "ஒங்களுக்கும் எனக்கும் என்ன ஸார் பேச்சு” என்று சொல்லி அவனை விரட்டி விட்டவள் இப்போது அவனைப் பார்த்து வி ட் டு மெ ல் ல ச் சிரித்தா ள் சீனி வாச னு க்கு க் கொண்டாட்டம். காஞ்சனா தனது தவறுக்கு வருந்துகிறாள். அவளை மன்னிக்கும்படி கண்களால் கேட்டுக் கொள்கிறாள். 'அய்யோ.. அத்தான் ஒங்கள் மனதைப் புண்படுத்தி விட்டேனே' என்று சொல்லாமல் சொல்கிறாளாக்கும்.

சீனிவாசனுக்கு, மகிழ்ச்சி மட்டற்றுப் போனது. பரோபகாரி என்று, காஞ்சனா முன் தன்னைக் காட்டிக் கொள்வதற்காக, பைக்குள் இருந்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து, அந்த ரயில் பயலிடம் நீட்டினான். பயல், அதை வாங்கிக் கொள்ள மறுப்பவன் போல், பலராமனைப் பார்த்தபோது, அதே அந்த காஞ்சனா, "வாங்கிக்கோடா' என்றாள். பயலும், அந்த ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டான். ஒருவேளை, மலேயா அம்மாவுக்குத் தேவைப் படலாம். அம்மாவுக்கு எவ்வளவு சேர்க்க முடியுமோ, அவ்வளவு சேர்க்கணும்:

சீனிவாசன், காஞ்சனாவை நன்றியுடன் பார்க்கப் பார்க்க, அவனுள் உற்சாகம் ஏற்பட்டுவிட்டது. காதல் வயப்பட்டு விட்டர்ன். ஆமாம். காதல் வயப்பட்டு விட்டான். அவன் உற்சாக உந்தலில் நகைச்சுவையாகச் சொல்வதுபோல் சொன்னான்.

'எனக்கென்னமோ. இந்த சர்தார்ஜி மேல சந்தேகமாய் இருக்குது. ஏதாவது கண்ணிவெடி வைத்தாலும் வைப்பான் ஒசைப்படாமல் வச்சுட்டு. ஒடிடப் போறான். நாமதான், கை வேறு. கால் வேறாய் ஆகப் போறோம். யாருக்குமே பயம் இல்லியா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/91&oldid=588387" இலிருந்து மீள்விக்கப்பட்டது