பக்கம்:நிழல் முகங்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

நிழல் முகங்கள்

காஞ்சனா பயந்து போனவள்போல், கல்யாணியைக் கட்டிப் பிடித்தாள். கல்யாணி, சீனிவாசனைப் பார்த்தபடியே, "சீ என்ன ஜென்மமோ” என்று சொன்னபடியே அவளைப் பிடித்துத் தள்ளினாள். இதற்குள் மெக்கானிக் நாராயணனும் சீனிவாசனை நேரடியாகவே திட்டப்போனான். அதற்குள் ஒரு முரடன் உள்ளே வந்தான். அங்கிருந்த எல்லோரையும் ஏற இறங்கப் பார்த்தான். பிறகு, அந்த ரயில் பயலை, தன்னை நோக்கிப் பிடித்துக் கொண்டு முதுகில் பட்டென்று அடித்தான். தமிழ்ச்செல்வி பயந்துவிட்டாள். 'யாரது. தன்னைத் துரத்தி வந்தவர்களில் ஒருத்தனோ..?

இ2

அ! ந் த ரயில், இப்போது இரு ட்டை உதறி விட் டு, வெளிச்சத்திற்கு வந்தது. -

இரண்டு பக்கமும் சின்னச் சின்ன வெளிச்சங்கள் ஏற்பட்டு அவை, பெரிதாயின. இரு புறங்களிலும் கட்டிடங்கள், வெளிச்சம் போட்டுக்காட்டின. சரவிளக்குகளாலோ அல்லது மின்சார விளக்குகளாலோ கோபுரம் ஒன்று தொலைவில் தெரிந்தது. வெளியே வாகனங்களின் நடமாட்டங்கள். பெட்டிக்குள்ளே மனிதப் பேச்சுக்கள். மயங்கிக் கிடந்த அரக்கன் மறுபடி சுயவுணர்வு பெற்றது போன்ற கலகலப்பு. ரயில், குலுங்கியபடியே மெள்ளச் சென்றது. எவ்வொரு குலுக்களுக்கும் ஒரு டங்க் சத்தம். 'வந்தேன் பார் வந்தேன் பார்” என்று சொல்வது மாதிரியான ஒசை

ரயில் பயல் முதுகில், அந்த முரடன் போட்ட அடிச்சத்தம், ரயில் சத்தத்தையும் மீறி வலித்தது. அந்த முரடனுக்கு முப்பது வயதிருக்கும். சட்டை மாதிரியான பனியன் போட்டிருந்தான். இடுப்பிலே பனியனுக்கு மேலே சேர்த்துக் கட்டிய லுங்கி, அதற்கு மேல் ஒரு சென்டி மீட்டர் அகலமுள்ள பெல்ட்

தமிழ்ச் செல்விக்கு லேசான திருப்தி வந்தவன், அவ்ளைக் கொல்ல வந்த முரடர் குழுவைச் சேர்ந்தவன் அல்ல. இவன் பெல்ட் போட்டிருக்கான். எதற்காக இந்தச் சின்னப் பயலை இப்படிப் போட்டு அடிக்கிறான். இவர்கள் ஏன் பேசாமல் இருக்கிறார்கள்? தமிழ்ச்செல்வி, தாறுமாறாக எழுந்தாள். அடித்த தடியனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்த ரயில் பயலை, தன் பக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/92&oldid=588390" இலிருந்து மீள்விக்கப்பட்டது