பக்கம்:நிழல் முகங்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சு. சமுத்திரம்

இழுத்துக்கொண்டு, அவனைக் கோபமாகப் பார்த்தாள். அவனும், அவளை முறைத்துப் பார்த்தான். உடனே பலர்ாமன் அவளுக்கு விளக்கினான்.

"இந்தப் பயலும் எங்களோட தோஸ்த்துதான். சமையலறையில். குக்காய். அதுதான் சமையல்காரனாய் இருக்கான். இந்தப் Lu೧ು. நைட்ல சாப்பிடப் போகாமல் போக்குக் காட்டுவான். ೬೧7೧೫ ஸ்டேஷன் வாரதுக்கு முன்னாடியே இவனுக்கு சாப்பாடு போட்டாகணும். அப்புறம் கிடைக்காது. இந்தப் பல ఆట33 போகல. அதனால்தான், இந்த அண்ணாமலைப் பயல் இங்கே வந்து இவனை இழுத்துட்டுப் போறதுக்கு வந்திருத்தான். டேய் பயலே. ஒப்பன் வந்து அடிக்கிற அளவுக்கா போகாமல் இருக்கது.? போடா. போய்ச் சாப்பிடு."

தமிழ்ச்செல்விக்கு அப்படியும் மனசு கேட்கவில்லை. "இருந்தாலும் இப்படியா அடிக்கது.”

அண்ணாமலை, அவளைச் சிறிது குற்றவுணர்வோடுதான் பார்த்தான். அவள் முகத்தில் கல்மிஷம் இல்லாததைப் புரிந்து கொண்டவன்போல் விளக்கினான். உள்ளங்கையைக் குவித்தபடி விளக்கினான்.

"இப்படி கையை குவிச்சுக்கிட்டு அடித்தால் மத்தாப்பு வெடி மாதிரி சத்தந்தான் பெரிசாய் கேட்குமே தவிர வலிக்காது. ஏண்டா சோம்பேறி. அப்பா அடிச்சது ஒனக்கு வலிச்சுதா?”

ரயில் பயல், இல்லையென்று கையாட்டினான். பிறகு, தமிழ்ச் செல்வியைச் சுட்டிக்காட்டி, வாய்வரை கையைக் கொண்டு போனான். பிறகு "அம். அம்." என்றான். அதாவது அவளுக்குச் சாப்பாடு கொடுத்தால் போதும். தனக்கு வேண்டாம் என்று சைகை செய்தான். உடனே அண்ணாமலை, அவனை ஆச்சரியமாகப் பார்த்தான். பார்த்தவனுக்கு நவாப்ஜான் விளக்கினான்.

"இந்த தங்கச்சியோட கதை. ஒன் சிஸ்டரோட கதையைவிட மோசமான கதை. வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்தவங்க. நாலைஞ்சு ரெளடிப் பசங்க. இதை தீர்த்துக் கட்டுறதுக்காக இந்த ரயிலுக்குள்ளேயே இருக்காங்க. இந்தப் பொண்ணைக் காப்பாற்ற வேண்டியது நம்மோட பொறுப்பு. அதனால் சமையல் பெட்டிக்குக் கூட்டிப்போ பாவம் சாப்பிட்டு இருக்காது. சாப்பிடச் சொல்லு. நைட்ல அங்கேயே தூங்கட்டும். அதுதான் பாதுகாப்பு."

பலராமன், நவாப்ஜானை அதட்டினான்.

"அடேய் சோம்பேறி. நாமெல்லாம் பொம்மனாட்டி. இந்த அண்ணாமலைக் கயிதே மட்டும் ஆம்புளையா. நீயும் நானும் அட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/93&oldid=588391" இலிருந்து மீள்விக்கப்பட்டது