பக்கம்:நிழல் முகங்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 81

ஒன்னை விடு, நான் உயிரோட இருக்கது வரைக்கும் தங்கச்சியை, எந்தப் பயலாலும் நெருங்க முடியுமா? தொடை நடுங்கிப் பயல்டா

"ஒனக்கு மூளையே கிடையாதுன்னு இந்த நாராயணன் சொல்றது சரிதாண்டா. சமையல் பெட்டி பாதுகாப்பான இடம். உள்ளே தாழ்ப்பாள் போட்டுக்கலாம். தங்கச்சியை இங்கே தங்க வச்சால் நாம் தூங்காமல் ஷிப்ட்ல காவல் காக்கலாம்தான். லேசாய் கண்ணை மூடும்போது ஏதாவது நடந்துட்ட்ால் அட அதைவிடு. இந்த பலார்ஷோ ஸ்டேஷன்ல இறங்கி வழக்கம்போல் போடப் போறோம். இவங்களை விட்டுட்டு நம்மாலே வெளில போகத்தான் மனசு வருமா."

"அட போடா. இன்னிக்கு மட்டும் "பூடாமல் இருக்கது? செத்தா பூடுவோம்.?"

"ஒன்கிட்டே எவண்டா பேசுவான்." "இதே கேள்வியை நானும் கேட்டதாய் வச்சுக்கோடா." மெக்கானிக் நாராயணன் குறுக்கிட்டான்.

"என்னடா. சின்னப் பசங்க மாதிரி சண்டை போடுlங்க..? தமிழ்ச்செல்வி, சமையல் அறைக்குப் போறதுதான் சரி. நாம் என்னதான் காவல் காத்தாலும் அவங்களுக்குப் பயம் போகாது. சமையல் அறை, வீடு மாதிரி. இங்கே ஸ்குவாட்காரன் அதுதான் டிக்கட் பரிசோதனைக்காரங்க திடீர் சோதனை போட்டுட்டால் வம்பு.”

தமிழ்ச்செல்வி, தன் பொருட்டு எழுந்த வாதப்பிரதிவாதங்களை, மெய்யுருகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு, தான் சுமையாகி விட்டோமே என்பதுபோல் மோவாயை நீட்டி, உதடுகளைக் குவித்து துணுக்குற்று நின்றாள். அவள் சந்தேகத்தைக் கலைப்பது போல், அண்ணாமலை கர்ஜித்தான்.

“புறப்படலாமா தங்கச்சி. ஏம்மா. அப்படி பார்க்கே? நீயும் எனக்குத் தங்கச்சிதான். எனக்கு ரெண்டு பேரு. ஒன்றுகூடப் பிறந்த தங்கச்சி. நீ கூடப் பிறக்காத தங்கச்சி. வீட்ல ஒரேயடியாய் வந்து உட்கார்ந்துட்ட தங்கச்சியும் ஒன்முகச்சாயலில்தான். இருப்பாள். புறப்படும்மா. நைட்ல அங்கேயே தங்கிக்கலாம். ஏம்மா என்மேல சந்தேகமா..?”

தமிழ்ச்செல்வி, "அண்” என்று சொல்லிவிட்டு அதை முடிக்க முடியாமல் அழுதுவிட்டாள். பிறகு தட்டுத் தடுமாறி, "ஒங்களைச் சந்தேகப்பட்டால் என் கண்ணு அழுகிடுண்ணா" என்ஆறு தழுதழுத்த குரலில் சொன்னபோது, அண்ணாமலை ஆடிப்போய் விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/94&oldid=588394" இலிருந்து மீள்விக்கப்பட்டது