பக்கம்:நிழல் முகங்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சு. சமுத்திரம்

அவள் முகத்தில் தோன்றிய அன்பெனும் ஜோதியில் அண்ணனாகக் கட்டுண்டான். அந்த கண்களில் தோன்றிய நம்பிக்கைக்கு, நடுநாயகனாகக் காட்சி காட்டினான். இதற்குள், ரயில் பயல், ஒரு கையால் அண்ணாமலையையும், இன்னொரு கையால் தமிழ்ச் செல்வியையும் இழுத்தான். பிறகு, அவர்களை விட்டுவிட்டு, தனது வலது கையை எடுத்து, வயிற்றில் இடித்து அதே கையை வாய்க்குக் கொண்டு போனான். பயலுக்கும் பசியாம். மெக்கானிக் நாராயணன், தமிழ்ச்செல்விக்கு விளக்கம் அளித்தான்.

"இந்தப் பயலுக்குப் பசிக்கல. இவன் பசியில்லாத பயல். காரணம் இந்தப் பூஞ்சை உடம்பால ஒரு கப் பாலைக்கூடத் தாங்கிக்க முடியாது. நீ சாப்பிடணும் என்கிறதுக்காக இல்லாத பசியை வரவழைக்கான்"

தமிழ்ச்செல்விக்கு, மீண்டும் அழுகை வரும் போலிந்தது. எப்படியோ அதை அடக்கிக் கொண்டாள். அம். அம்." என்று தன்னைப் பார்த்துக் கூவிய அந்தப் பயலை, தன் உடம்போடு உடம்பாகச் சேர்த்துக்கொண்டாள். அவனுக்குள் அவளும், அவளுக்குள் அவனும் அடங்கிப் போனது மாதிரியான அன்புப் பிரவாகம். அந்த இருவரும் அண்ணாமலை முன் நடக்க, பின் நடந்தார்கள். உடனே, பலராமனும், நவாப்ஜானும், பெட்டிக்கு வெளியே வந்து அவளை யாரும் பின்பற்றுகிறார்களோ என்று அங்கும் இங்குமாய்ப் பார்த்தார்கள். சிறிது நேரம் வீறாப்போடு நின்றார்கள். பிறகு, இருக்கையில் வந்து உட்கார்ந்தார்கள்.

இ2

அந்த ரயில், குதியும் கும்மாளமுமாய் பலார்ஷா என்ற ரயில் நிலையத்தில் நின்றது.

மராட்டிய மண்ணைச் சேர்ந்த இடம் அது. சற்று தொலைவில் ரயில் வரும்போதே, ஆகாய நட்சத்திரங்கள் அனைத்தும் வெள்ளைப் பிரகாசம் குறையாமல், தரை இறங்கி, விட்டனவோ என்பது மாதிரியான மின்சார விளக்குகள், ரயிலை வரவேற்றன. ரயிலே, ஆகாய கூரைக்குள் போய் விட்டதோ என்பது மாதிரி, அந்த ரயில் நிலைய மேல் வட்டத்தில் ஜோதிச் சிதறல்கள். ஆனாலும் ரயில், நிர்வாகத்திற்குள் அடைபட்டதும், அந்த நிலையம் தவிர,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/95&oldid=588397" இலிருந்து மீள்விக்கப்பட்டது