பக்கம்:நிழல் முகங்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சு. சமுத்திரம்

"இது என்னடா வம்பாச் போச்சு."

"அடேய் சாய்பு. நாம் தோட்டிங்க. அவங்க பிராமணங்க, எப்படிடா அண்ணன் தங்கை உறவு வரும். நமக்கு வரும். அவங்களுக்கு அது வரணுமுன்னு எப்படிடா நினைக்கலாம்?"

கல்யாணி திடுக்கிட்டு, தோழி காஞ்சனாவை அதட்டினாள்.

"இங்கே வாடி பணத்தோட வாடி அவங்க நம்மோட பிரதர்ஸ் மாதிரி. அவங்க வாங்கித் தந்தால் தப்பில்ல."

நவாப்ஜானும், பலராமனும் புறப்பட்டார்கள். சீனிவாசனுக்கு லேசான வருத்தம். காஞ்சனா, தன்னை ஏதாவது வாங்கிக் கொண்டு வரச் ச்ொல்லவில்லையே என்று. அதேசமயம், அப்படி வாங்கப் போய் தனக்கு பிரதர் பட்டம் கிடைக்காமல் போன மகிழ்ச்சி. அவனுக்கு அங்கிருந்து போக மனமில்லை. அதேசமயம், வயிறு கேட்கவில்லை. ஆகையால், இடத்திலிருந்து ஒடி, பலராமனை வழிமறித்து, "எனக்கும் ஏதாவது வாங்கிட்டு வாங்க" என்றான்.

உடனே நவாப் ஜான், "நீயும் பொம்மனாட்டியாய்யா...?" என்றான். பலராமனுக்கு, நவாப்ஜான் அப்படிப் பேசியது கேட்க வில்லை. அவனை அதட்டியபடியே, "மடையா. அவரை அப்படியா கேட்கிறது. வாறியா ஸாரே. சாராயம் பூட்டுட்டு வர்லாம். யோசிக்காதே. ஒனக்கு ஜின் கிடைக்கும். இல்லாட்டி விஸ்கி கிடைக்கும் என்றான். சீனிவாசன் அலறியடித்தபடி பெட்டிக்குள் வந்தான். அந்தப் பெண்களிடம் "சாராயம் குடிக்கப் போறாங்க. குடிகாரங்களைப் போய் வாங்கிட்டு வரச் சொல்லிட்டிகளே. அவங்க வாங்கிட்டு வாறதுல. சாராய வாடை அடிக்கப் போகுது பாருங்க.." என்று பத்துப் பதினைந்து தடவை சொல்லிவிட்டான். அந்தப் பெண்கள், முகம் சுளித்தார்கள். சீனிவாசன், மனதில் வெற்றிப் பெருமிதம் குடிக்காத வாலிபன் என்று தன்னைக் காட்டிக் கொண்டதில் பெருமகிழ்ச்சி.

ரயிலுக்குக் கீழே இரும்புச் சத்தம். மெக்கானிக்குகள், சக்கரங்களைத் தட்டிப் பார்த்து சரிபார்க்கும் சத்தம். டீ, காப்பி சத்தங்கள். பிறகு சக்கரச்.சத்தம் தவிர எல்லாம் அடங்கின. ரயில் புறப்படவில்லை. அரைமணி நேரத்தில் புறப்பட வேண்டிய ரயில், முக்கால் மணி நேரமாகியும் புறப்படவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு, உள்ளே வந்து பெட்டிக்குள் உட்கார்ந்த நாராயணன் பெட்டியின் வாசலில் போய் நின்றான்.

இதற்குள், நவாப்ஜானும் பலராமனும் லேசாய்த் தள்ளாடியே நடந்து வந்தார்கள். இருக்கைகளில் பொத்தென்று விழுந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/97&oldid=588404" இலிருந்து மீள்விக்கப்பட்டது