பக்கம்:நிழல் முகங்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 85

பிறகு ஒருவரை ஒருவர் நிதானப்படுத்த முயற்சி செய்தார்கள். இதற்குள் மெக்கானிக் நாராயணன், அங்கே வந்து அவர்களை அதட்டினான்.

"ஏண்டா இவ்வளவு நேரம் லேட்டு. ஒங்களுக்காக, ரயிலை, மணியடித்து கால்மணி நேரமாகியும் நிறுத்தி வச்சேன். நமடி பசங்களை நீங்க கண்ணுல படுறது வரைக்கும் சக்கரங்களை தட்டிப் பார்க்கச் சொன்னேன். ஒங்க மனசல என்னடா நினைக்கிங்க. அடுத்த வாட்டி இப்படி செய்திங்க. நீங்க ஏறுறதுக்கு ரயில் நிற்காது."

"மன்னிச்சிடு நாராயணா. நீ நெசமாவே பூரீமான் நாராயணன்தான். இல்லாட்டி பூலோகத்தை இல்ல. இல்ல. இந்த ரயில நிறுத்தி வைக்க முடியுமா..? மன்னிச்சிடு. சிஸ்டருங்களுக்கு வாங்கிட்டு வாரதுல லேட்டாயிட்டு. சிஸ்டருங்கோ இந்தாருங்கோ வாங்கிக்கங்கோ. இதுல எது பிரியாணி சிஸ்டரு? எது தயிர்சாதம் £isive fr’

நவாப்ஜான், அதட்டினான்.

அடேய் ... பல் ரா மா ... நீயே உன் ைன க் காட் டி க் கொடுக்காதேடா. கம்மனாட்டி"

ஆனாலும், பலராமன் ‘உளறலாகவும் குழறலாகவும் உடலாட்டியும் தன்னைக் காட்டிக் கொண்டிருந்தான்.... நவாப்ஜானால், நடமாட முடியவில்லை. தள்ளாடி, அல்லாடினான். உடனே நாராயணன், பலராமன் கையில் இருந்த பொட்டலங்களை எடுத்து, அந்தப் பெண்களிடம் நீட்டினான். அப்போது சீனிவாசன், காஞ்சனாவைப் பார்த்து கண் சிமிட்டினான். சாராயம் பட்ட சாப்பாடு. அதைச் சாப்பிடுவது சாராயம் சாப்பிடுவது மாதிரி என்பது போல் கண் சிமிட்டினான். காஞ்சனா, கல்யாணியைப் பார்த்தாள். கல்யாணி, சீனிவாசனைப் பார்த்தாள். பிறகு இரண்டு பெண்களும் அந்தப் பொட்டலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, படுப்பதற்கு ஆயத்தம் செய்தார்கள்.

பலராமனும், நவாப்ஜானும், கீழே கம்பளி விரித்துப் படுத்துக் கொண்டார்கள். நாராயணன், ஒரு பெர்த்தில் படுத்துக் கொண்டான். சர்தார்ஜி, தெலுங்கம்மா, டில்லிப் பெண்கள், சீனிவாசன் - ஆக எல்லோரும் படுத்துக் கொண்டார்கள். ரயில் இரவைக் கிழித்து தோள்தட்டிச் சென்றது. ரயில் தொட்டிலில் எல்லோரும் தூங்கிவிட்டார்கள். திடீரென்று காஞ்சனா கத்தினாள். பொறுக்கிப் பயல்கள். புறம்போக்குப் பயல்கள். காட்டு மிராண்டிப் பயல்கள். சீ இவங்கெல்லாம் மனுஷாளா. பன்றிப் பயல்கள்.

● 7.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/98&oldid=588406" இலிருந்து மீள்விக்கப்பட்டது