பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/118

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வேண்டும் என்றும், அவர்களைத் தேடுவதற்காக லெகிரி செய்யும் ஆர்ப்பாட்டங்க ளெல்லாம் ஓய்ந்த பின்பு, உண்மையிலேயே தப்பி ஓடிவிட வேண்டும் என்றும் அவள் முடிவு செய்தாள். ஒரு நாள் இரவில் கேஸியும் எமிலினும் வெளி யேறிச் சென்றுவிட்டார்கள். ஆனல் சிறிது தூரத்தில் நிழல்களைப்போல இரண்டு உருவங்கள் அசைந்து செல்வதைக் கண்டுகொண்ட லெகிரி, தன் அடிமை களே அழைத்து, நாய்களை அவிழ்த்துக்கொண்டு வரும்படி சொன்னன். நாய்கள் வந்தன. கூடவே சம்போ, கிம்போ முதலியவர்களும் ஆயத்தமாக வந்து நின்றனர். அடிமைகளை வேட்டையாடிப் பிடிப்பதற்காக லெகிரி தன் பரிவாரங்களுடன் வெளியே கிளம்பி விட்டான். புறப்படுமுன், தப்பியோடியவர்கள் கேஸி யும், எமிலினும் என்பதை அவன் தெரிந்துகொண் டான். அவர்கள் தங்களுடைய அறைகளில் இல்லை யென்று மற்ற அடிமைகளும் வந்து தெரிவித்தனர். லெகிரி கடுங் கோபத்துடன் உறுமிக்கொண் டிருந்தான். இதுவரை நமது பண்ணையிலிருந்து ஓர் அடிமை கூட ஓடிப்போனதில்லை ! இது புதுமையாய்த் தான் இருக்கிறது ! காலு பக்கத்திலும் ஒடிப் போய் நீங்ேகள் தேடுங்கள் ! என்று அவன் அடிமைகளிடம் கூறினன். நாய்களை அழைத்துக்கொண்டு, அவன் அவைகளின் பின்னலேயே ஓடிச் சென்ருன். நாய்கள் மோப்பம் பிடித்துக்கொண்டே ஓடின. வழியிலே ஒரு சிறு வனம் இருந்தது. அதைத் தாண்டிய பிறகு, ஒரு நீரோடை இருந்தது. அந்த ஒடைவரை நாய்கள் சென்று, இக்கரையிலேயே நின்றுவிட்டன. அவைகள் சிறிது கேரம் அந்தப் பக்கமும் இந்தப் பக்க

I I ()

110