பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளே கம்பவில்லை. டாம் ஆன்மாவையே நம்பி யிருந்தான். லெகிரி உடலையே நம்பியிருந்தான். ஆனல் டாமை அடக்கி வைக்காவிட்டால், மற்ற அடிமைகளும் பின்னல் கிமிர்ந்து நிற்கத் தொடங்கி விடுவார்கள் என்றும் லெகிரி கருதியிருந்தான். ஒரு நாள் அவன் தன் கையாட்களே அழைத்து, ' உடனே டாமைக் கூட்டி வாருங்கள் !" என்ருன். டாமுக்கு அன்று சரியான மரியாதை கிடைக்கும் என்று சம்போவும் கிம்போவும் பெரு மகிழ்ச்சி யடைந் தனர். அவன் உயர்ந்த ஒழுக்கத்துடன், கண்ணிய மாக இருந்ததுதான் அவர்களுடைய வெறுப்புக்குக் காரணம். அவர்கள் போய் டாமை இழுத்துக்கொண்டு வந்தனர். வருகிற பாதையிலேயே, அவன், ஆண்ட வரே, என் ஆவியை உம்மிடம் ஒப்படைக்கிறேன் ! நீரே என் சரணலயம் எனக்குச் சீக்கிரத்தில் விடுதலை அளித்து, என்னை உம்மிடம் அழைத்துக்கொள்ளும்' என்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். பெண் கள் இருவரும் தப்பியோடிய விஷயம் அவனுக்குத் தெரியும். அந்த நேரத்தில் அவர்கள் எங்கே ஒளிங் திருந்தனர் என்பதையும் அவன் அறிவான். யசமான னுடைய கொடூரமான குணத்தை அவன் தானே பல முறை அனுபவித்திருந்தான். காட்டின் சட்டமும் வெள்ளே யசமானனுக்கே உதவியாயிருந்தது. இவை களையெல்லாம் எண்ணிப் பார்த்து, டாம், என் உயி ருள்ளவரை அந்த ஏழைப் பெண்களை நான் காட்டிக் கொடுத்துவிடக் கூடாது அதற்கு வேண்டிய வல்ல மையை எனக்கு அருளவேண்டும், பெருமானே ! என்று அவன் கருணுமூர்த்தியான கடவுளைத் தொழு ,'/, II fiUif.

1 14

114