பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/127

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பிறகு அவர்கள் இருவரும், ஏசுபெருமானே ! எங்களுக்கும் நீர் இரக்கம் காட்டவேண்டும் !" என்று துதித்தனர். டாமின் கடைசிப் பிரார்த்தனையும் அது தான்-அவர்கள் இருவருக்கும் நல்லறிவு உண்டாக வேண்டும் என்றுதான் அவன் கர்த்தரை வேண் டிஞன். 20. மகத்தான சபதம் இரண்டு நாட்களுக்குப் பின்னல், அழகு ததும் பும் வாலிபன் ஒருவன். ஒரு குதிரை வண்டியை ஒட்டிக் கொண்டு, லெகிரியின் வீட்டைத் தேடிவந்து சேர்க் தான். வண்டியை விட்டுக் கீழே குதித்து, அந்த வீட்டின் சொந்தக்காரர் யாரென்று அவன் விசாரித் தான். அவன்தான் ஷெல்பி பிரபுவின் மகன் ஜியார்ஜ். அப்பொழுது அவனுக்கு வயது பதினெட்டிருக்கும். டாம் மாமாவை மறந்துவிடாமல், அவனைக் கண்டு, ஊருக்கு அழைத்துப் போவதற்காக அவன் வந்திருங் தான். ஆளுல் அவன் காலங்கடந்து வந்திருந்தான். முன்னுல் ஒபீலியா திருமதி ஷெல்பிக்கு எழுதி யிருந்த கடிதம் குறித்த காலத்தில் போய்ச் சேர வில்லை. அது எங்கோ கிராமப் பகுதியில், ஒரு தபால் நிலேயத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாகக் கிடந்து விட்டது. கடைசியாகத் திருமதி ஷெல்பிக்கு அக கடிதம் போய்ச் சேர்ந்த சமயத்தில், ஷெல்பி பிரபு நோயுற்றிருந்தார். அவரைக் கவனிக்கவே அவளுக்கு

II 9

119