பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/129

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வைத்துக்கொண்டு புறப்பட்டான். நியூஆர்லியன் எலிலும், பக்கங்களிலும், அவன் டாமைப்பற்றி விவர மாக விசாரித்ததில், அவன் லெகிரியின் பண்ணையில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்படி அவன் லெகிரியைத் தேடி வந்திருந்தான். ஆளுல் அவன் வரும்வரை காலம் காத்திருக்கவில்லை ! ஜியார்ஜ் லெகிரியைக் கண்டு பேசினுன். டாம் சிறு வயது முதலே எங்கள் பண்ணையில் இருந்தவன். அவனே நீங்கள் சங்தையில் விலைக்கு வாங்கியதாகக் கேள்விப்பட்டு, இங்கே வந்துள்ளேன். அவனே மீட்டுக் கொண்டு போவதற்கு உரிய பணமும் கொண்டு வங் திருக்கிறேன் !' என்று அவன் தெரிவித்தான். 'சரிதான் ஆனல் நான் செத்த நீகிரோக்களுக்கு விலை வாங்குவதில்லை !’ என்ருன் லெகிரி. 'ஆ' என்ன சொல்லுகிறீர்கள் ?' என்று ஜியார்ஜ் கேட்டான். 'நான் இதுவரை வாங்கிய அடிமைகளில் கழி வானவன் இந்த டாம்தான் ! அவனுல் நான் அடைந்த துன்பங்கள் போது ம் போது மென்ருகிவிட்டன : பண்ணையிலிருந்து இரண்டு பெண்களை அவன் வெளியே கடத்தி அனுப்பிவிட்டான். அவர்கள் போயி ருந்த இடமெல்லாம் அவனுக்குத் தெரியும். ஆளுல் என்னிடம் உண்மையைச் சொல்ல மறுத்துவிட்டான். பிறகு நான் என் கைவரிசையைக் காட்ட வேண் டாமா : ஒரு நாள் இரவு முழுவதும் இரண்டு அடிமை களைக் கொண்டு அவனை அடித்துத் தள்ளச் சொன் னேன். கீழே சாய்ந்தவன் எழுந்திருக்கவேயில்லை. இந்த வீட்டுக்கு அருகில், வெளியே ஒரு கொட்டடியில் கிடக்கிருன் ' என்று லெகிரி கடறினன்.

121

121