பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/131

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பெருக்கியதைக் கூட அவன் அறிந்திருக்க மாட்டான். மாடியிலே தனியறையில் ஒளிந்திருந்த கேஸி கூட ஒரு முறை துணிந்து வெளியே வந்து, அவனைப் பார்த்துச் சென்ருள். தனக்காகவும், எமிலினுக்காக வும் உயிர்த் தியாகம் செய்யத் துணிந்த அந்த உத் தமனை எண்ணி எண்ணி அவள் கண்ணிர் விட்டாள் பிறருக்காக வாழ்பவன் தன்னைக் காத்துக்கொள்ள முடியாது என்று முன்னுல் டாம் அவளிடம் கூறிவங் ததை அவள் கினைத்துக்கொண்டு பொருமினுள். டாமைப் போன்றவர்களாலேயே உலகம் அழியாம லிருப்பதாக அவள் எண்ணினுள். அவனுக்காக அவள் ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்தாள். தான் இருந்த கொட்டடியில் ஜியார்ஜின் பெய ரையும், அவன் குரலையும் கேட்ட டாமின் மனத்தில் மெல்ல மெல்ல அவன் நினைவு உண்டாயிற்று. அவன் முகம் மலர்ச்சியடைந்தது. வெறுமே பாழ்வெளியைப் பார்த்து வெறித்திருந்த அவன் கண்களில் ஒளி உண் டாயிற்று. அவன் கண்களிலிருந்து நீர் பெருகிக் கன்னங்களில் வழிந்துகொண்டிருந்தது. 'கடவுள் மகிமையுள்ளவர் ! உண்மைதான்உண்மைதான்-இதற்காகத்தான் நான் காத்துக் கொண்டிருந்தேன் - இதைத்தான் வேண்டியிருங் தேன் என்னை அவர்கள் மறக்கவில்லை-எப்படி மறப் பார்கள்? ஆண்டவரே, என் ஆன்மா சாந்தியடைந்து விட்டது இனி நான் அமைதியாகச் சாகமுடியும் ! என்ற சொற்கள் அவன் வாயிலிருந்து தீனமான குர லில் வெளிவந்தன. டாம் மாமா, நீ இறக்கவே கூடாது உன்னை மீட்டுக்கொண்டு போகவே நான் வந்திருக்கிறேன் !

1 2 3

123