பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிமையை மணந்துகொண்டாள். ஹாரிஸ் பக்கத்து ஊரில் வேறு ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுடைய முதலாளி இரக்க மற்றவர். அவர் அவனைப் பலவாறு துன்புறுத்தி வந்தார். அத்துடன் அவன் மேற்கொண்டு எலிஸா இருக்கும் இடத்திற்குப் போகக்கட்டாது என்று கட்டுப் பாடு செய்திருந்தார். ஆனால் அவன் இரகசியமாக, அவருக்குத் தெரியாமல், அவளைப் பார்ப்பதற்காக இரவில் சென்றிருந்தான்.

எலிஸா அவனைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்து, அவனைத் தன் அறைக்குள் அழைத்துச் சென்றாள். அங்கு அவன் முகம் களையிழந்து காணப்பட்டது. எலிஸா குழங்தை ஹாரியைத் துாக்கி அவனிடம் காட்டினாள். ஹாரிஸ், இவன் ஏன் பிறந்தான் என்று தான் வருத்தமாயிருக்கிறது!’ என்றான். அதைக் கேட்டு எலிஸா நடுக்கமடைந்தாள். அவள் அவன் அருகில் அமர்ந்துகொண்டு, ஹாரிஸ், நீ ஏன் இன்று இவ்வளவு வருத்தமாயிருக்கிறாய் ? என்று கேட்டாள்.

'நானும் பிறந்தே யிருக்கக்கூடாது. அடிமைக ளாகிய நமக்கு வாழக்கூட உரிமை கிடையாது. நான் புத்திசாலியா யிருப்பது என் முதலாளிக்குப் பிடிக்க வில்லை. நான் எங்கேயாவது ஒடிச்செல்ல விரும்புகி றேன். இன்னும் ஒரு வாரத்தில் நான் தப்பி ஓட. வேண்டும். என்னே எவரும் பிடிக்க முடியாது. எப்படி யாவது நான் கானடா தேசத்திற்குப் போய்விட்டால், இந்த அடிமைத் தொல்லே ஒழிந்துவிடும்.'

! நீ போய்விட்டால், என் கதி என்னவாகும்?" 'சில நாட்களுக்குப் பிறகு நீயும் அங்கே வந்து விடு! அங்கே நாம் சந்தித்துக்கொள்வோம். அப்படி

7

7