பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மீதிருங் தாள்களில் சில எழுத்துக்களே எழுதிக் கொண்டிருந்தான். அவன் அருகில் ஷெல்பியின் மூத்த குமாரன் ஜியார்ஜ் உட்கார்ந்து கொண்டு, அவள் எழுதுவதைக் கவனித்து வங்தான். டாம் தவருக எழுதும்பொழுது, அவன், "இப்படி எழுத வேண்டும்’ என்று திருத்திக் கொடுத்தான். அவன் சொல்லிய வண்ணமே டாம் திருத்தி எழுதினான். ஒரு பக்கத்திலே குழந்தைகள் இன்பமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். மறு பக்கத்திலே, பகல் முழுதும் நன்ருக உழைத்து வந்த டாம், கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு, எழுதிக் கொண்டிருந்தான். அடுப்படியிலே குளோ மகிழ்ச்சியோடு வேலை செய்து கொண்டிருந்தாள். இத்தகைய அமைதியான இன்பமுள்ள குடும்பம் உலகிலே அரிது என்று சொல்லும் படி இருந்தது.

திடீரென்று ஜியார்ஜ், 'அத்தை! பணியாரம் தயாராகி விட்டதா ? எனக்குப் பசியாயிருக்கிறது!’ என்று கேட்டான். அவள் எல்லாம் தயாராகிவிட்டதாகக் கூறினாள். மேசை மீதிருந்த புத்தகமும் தாள்களும் வேறிடத்தில் எடுத்து வைக்கப்பட்டன. மேசைமீது டாம் ஒரு துணியை விரித்து வைத்தாள். அவனுக்கும் ஜியார்ஜூக்குமாக, குளோ சில தட்டுக்களில் பணி யாரங்களைக் கொண்டு வந்து வைத்தான். அவர்கள் சாப்பிடத் தொடங்கினார்கள். அப்பொழுது ஜியார்ஜ் சில பண்டங்களை எடுத்துத் தரையிலே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் கொடுத்து உண்ணச் செய்தான்.

சாப்பாடு முடிந்தபின்பு, குளோ மேசையை நன்றாகத் துடைத்துவிட்டு, அதை அறையின் நடுவே

10

10