பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாங்கியவன் அதோ எதிர்க்கரையிலே நிற்கிரான்!' என்று பதறிக்கொண்டே கூறினாள்.

'நீ ஷெல்பி வீட்டுப் பெண்ணல்லவா !' என்று அவர் கேட்டார். அவர் யார் என்பதையும் எ லிஸா தெரிந்துகொண்டாள். அவர் பெயர் சைம்ஸ். லிஸா சிறுவயதில் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் ,குடி யிருந்தவர் அவர். அவர் அவளுக்கு ஆறுதல் சொல்லி, சிறிது தூரத்தில் வெள்ளை நிறமாய்க்காணப் ை பட்ட ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டி னார். அங்கேயுள்ள வர்கள் நல்லவர்கள். உன்னைப் பாதுகாப்பார்கள் !' என்றும் அவர் சொல்லியனுப்பினர்.

எலிஸாவை நேரில் கண்டபின்பும், அவளைப் பிடிக்க முடியாமல் போய்விட்டதே என்ற ஏக்கத் துடன், அடிமை வியாபாரி ஹேலி பக்கத்திலிருந்த சத்திரத்தை நோக்கித் திரும்பிச் சென்ருன். வீட்டுக்குத் திரும்பிச் சென்ற ஸாமும் ஆண்டியும் கடந்த விஷயங்களையெல்லாம் யசமானியம்மாளிடம் தெரிவித்தார்கள். அவள் மிகவும் வியப்படைந்து, "ஆண்டவன் அவளைக் காப்பாற்றுவான் ! இப்பொழுது இரவு பதினெரு மணியாகிறது. நீங்கள் மிகவும் களைத் திருப்பீர்கள். முதலில் நீங்கள் போய்ச் சாப்பிட்டு வாருங்கள் ! என்று சொன்னன்.

நீகிரோவர் இருவரும், இன்பமாகச் சிரித்துக் கொண்டே, சமையலறைக்குச் சென்றார்கள்.

25