பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லையே! யசமானர் உன்னை ஏன் விற்கவேண்டும்? இத் தனை ஆண்டுகளாக நீ அவருக்கு உழைத்தாயிற்று. இனி உனக்கு விடுதலை கொடுத்து அனுப்பவேண்டும். அதைவிட்டு, இப்படி விற்கலாமா ? என்ருள் குளோ. 'யசமானரைப் பற்றித் தவருகப் பேசாதே! அவர் சிறு குழந்தையாயிருந்த பொழுது, அவரை நான் எடுத்து வளர்த்தேன். மனமாற நான் இதுவரை அவ ருக்குக் கெடுதல் செய்ததில்லை. அவரும் எனக்குக் கேடு நினைத்ததில்லை. ஏதோ காலம் சரியில்லை, என்னை விற்கும்படி நேர்ந்து விட்டது. இதில் எனக் குச் சந்தோஷம்தான்! ஏனென்ருல், உங்களை விற்று விட்டு, என்னை இங்கே வைத்திருந்தால், இன்னும் மோசமாயிருக்கும். நீங்கள் நல்ல இடத்திலே இருக் கக் கிடைத்திருக்கிறது. இது நமது பாக்கியம்தான்!” என்றான் டாம் மாமா.

"டாம், இதுவே நமது கடைசிச் சந்திப்பு என்று தான் எனக்குத் தோன்றுகிறது. தெற்கே போனவர் களில் மீண்டவரை நான் கண்டதேயில்லையே!”

இவ்வாறு சொல்லிக்கொண்டே, குளோ மீண்டும் தேம்பித் தேம்பி அழுதாள். டாமின் கண்களிலும் நீர் தளும்பி நின்றது. அவர்களைப் பார்த்துப் பையன் களும் இரைந்து அழத் தொடங்கினர்.

டாமுக்கும் குழந்தைகளுக்கும் உணவு பரிமாறி விட்டு, குளோ அவனுடைய உடைகளை எடுத்து ஒரு பெட்டியிலே அடுக்கி வைத்தாள்.

சாப்பிட்ட பின்பு, டாம் கைக்குழந்தையை எடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான். கள்ளம் கபடம் எதுவும் தெரியாத அக்குழந்தை, வழக்கம்போல், அவன் தலைமயிரைப் பிடித்து இழுத்து விளையாடிக்

32