பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/55

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறிந்த ஹேலி அவனுடைய விலங்கைக் கழற்றிவிட். டான். டாம் கப்பலில் எங்கு வேண்டுமானாலும் சுற்றி வர அனுமதிக்கப்பட்டிருந்தான். இடையிடையே, அவன் தன்னைப்போல் வீடுவாச லில்லாமல், உறவினரையெல்லாம் பிரிந்து, அங்கே கூடியிருந்த அடிமைகளைப் பற்றி எண்ணமிட்டான். எல்லோரும் நியூ ஆர்லியன்ஸ் நகரத்துச் சந்தை களிலே விற்கப்பட வேண்டியவர்கள். மனிதரை மனி தரே இப்படிக் கொடுமைப்படுத்துதல் எப்பொழுது ஒழியுமென்று அவன் சிந்தனை செய்தான். வேதப் புத்தகத்தில், 'உன் இதயம் துயரப்பட வேண்டாம் என் னுடைய தந்தையின் வீட்டில் ஏராளமான அறைகள் இருக்கின்றன. அங்கே உனக்கும் ஓர் இடம் பார்த்து வைத்திருக்கிறேன்' என்ற வாக்கியத்தைப் பார்த்த தும் அவன் சிறிது ஆறுதலடைந்தான். கப்பலின் மேல்தளத்தில், நேர்த்தியான அறை ஒன்றில், ஆறு வயதுச் சிறுமி ஒருத்தியும் அவள் தந்தையும், வயது முதிர்ந்த பெண் ஒருத்தியும் இருந் தனர். அவர்களும் நியூ ஆர்லியன்ஸுக்குத்தான் போகிறவர்கள். அந்தச் சிறுமிக்மிகுந்த அழகுடன் விளங்கினாள். தங்க நிறமுள்ள அவள் கூந்தலும், நீலக்கண்களும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்துபவை. அவள் ஓர் இடத்தில் தங்காமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டேயிருந்தாள். ஒரு சமயம் கறுப்பு நிறமா யிருந்த கூட்டத்தாரைக் காட்டி, 'அப்பா, இவர்கள் யார்?' என்று அவள் கேட்டாள். அவர்கள் அடிமை கள் என்று தந்தை கூறியதும், அவள். 'அவர்களுக் காக இரக்கப்படுகிறேன்!' என்றாள். 'நானும் இரக்கப் படவே செய்கிறேன்! நம்முடைய தென் ராஜ்யங்

47

47