பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/67

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கள் இருந்தனர். ஒபீலியா எல்லா வேலைகளையும் தானே. மேற்பார்த்து வந்தாள். வீட்டைச் சுத்தம் செய்தல், சமையல், சாப்பாடு, அடிமைகளை முறையாக வேலை வாங்குதல் ஆகிய எல்லா வேலைகளையும் அவளே கவ னித்து வந்தாள். டாப்ஸி வந்து சேர்ந்தது, தனக்கு உதவியில்லே, உபத்திரவம்தான் என்று அவள் கருதினா ள்ை. அதற்கு ஏற்றாற் போலவே டாப்ஸியின் வேலை களும் இருந்தன. அவள் வந்த பிறகு எந்தச் சாமானும் வைத்த இடத்தில் இருப்பதில்லை. உயர்ந்த பட்டில் தயாரிக்கப் பெற்றிருந்த ஒபீலியாவின் அலங்கார மான தொப்பியில் ஒரு பகுதியை டாப்ஸி வெட்டி, அந்தத் துணியைக் கத்தரித்துப் பொம்மைகளுக்கு உடைகள் தயாரித்துக் கொண்டிருந்தாள். ஒபீலியா வின் உடைகளான 'கவுன்'களை எடுத்து டாப்ஸி தலை யணைகளுக்கு அணிவித்து, அவைகளை கட்டமாக நிறுத்தி, அவைகளைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந் தாள். இந்தத் திருவிளையாடல்களை யெல்லாம் அறிந்த டாமும் ஈவாவும் டாப்ஸியிடம் இரக்கம் கொண்டு அவளே எப்படித் திருத்தலாம் என்று தனித்தனியே முயற்சி செய்து வந்தனர். - 11. அன்பு நிறைந்த உள்ளம் இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அகஸ்டின் பிரபுவின் மாளிகையிலே, ஈவாவின் அன் பையும் ஆதரவையும் பெற்று டாம் இ ன் ப மாக

59

59