பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னகை செய்தாள். 'யசமான், எல்லாம் முடிந்துவிட் டது' என்ருன் டாம். ஈவா மரணத்தைத் தாண்டி, மறுஉலகம் சென்று விட்டாள். 13. அடிமைகளுக்கு நேர்ந்த அவதி ஈவாவின் ஈமக்கிரியைகள் முடிந்த பின்பு, அகஸ் டின் குடும்பத்தார் கிராமத்தைவிட்டு, நகர மாளிகைக் குச் சென்ருர்கள். நகரத்தில் அகஸ்டின், வெளியே போய், நண்பர்களை அடிக்கடி கண்டு, அளவளாவிப் பேசிவந்தார். முன்பெல்லாம் அவர் இம்மாதிரிச் சுற்றுவ தில்லை. ஆனல், இப்பொழுது எந்த நேரத்திலும் ஈவா வின் நினைவு அவர் நெஞ்சைவிட்டு அகலாதிருந்ததால், அவர் கண்பர்களின் மூலம் சிறிதளவு அமைதி பெறு வதற்காக வெளியில் சுற்றிக்கொண்டிருந்தார். அவர் குறித்த வேளையில் வந்து உண்பதில்லை. உணவிலேயே அவருக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. நாளுக்கு காள் அவரது உடலும் கலிவடைந்துவந்தது. 'காம் சுவர்க்கத்தில் சந்திப்போம் ! என்று ஈவா அடிக்கடி கூறிவந்தது அவர் செவியில் ஒலித்துக் கொண்டே யிருந்தது. அத்தகைய சந்திப்பு விரைவில் கிடைக்குமா என்று அவர் ஏங்கலாஞர். அவருடைய மனைவிக்கு அவரிடம் வருத்தம் ஏற் பட்டிருந்தது. அவர் தன்னிடம் வந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிராமல், வெளியே. அலைகிருர் என்று அவள் துக்கப்பட்டாள்.

70

70