பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/81

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அவனுடைய விடுதலைப்பத்திரம் தயாராகவில்லையே என்று வருத்தப்பட்டார். சில நிமிடங்களுக்குப் பின்னர் அவருடைய ஆவி பிரிந்துவிட்டது. அவர் தன் அருமைக் குமாரியிடம் போய்ச் சேர்ந்துவிட்டார். திடீரென்று எதிர்பாராத நிலையில் அகஸ்டின் இறந்துபோனதால், அடிமைகள் அனைவரும் திகி லடைந்து திகைக்கலாஞர்கள். மாளிகை முழுவதும் அழுகைக் குரலைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. யார் யார் எங்கெங்கே விற்கப்படுவார்களோ என்று எல்லோரும் கலக்கம் அடைந்திருந்தனர். அங்கே யிருந்தவர்களில் டாமும் ஒபீலியாவுமே மனமுடையா மல் தைரியமாக இருந்தனர். பிரேத அடக்கம் முடியும்வரை டாம் இறைவனைப் பற்றியும், விதியைப் பற்றியும் எண்ணி, பிரார்த்தனை செய்துகொண்டே யிருந்தான். பின்னுல்தான் அவன் தன் நிலைமையைப்பற்றி எண்ணலானுன். கணவர் இறந்தவுடனேயே மேரி தங்கள் குடும்ப வக்கீலை அழைத்து அடிக்கடி பேசிவந்தாள். அவர்க ளுடைய பேச்சின் விளைவாகச் சில முடிவுகள் செய்யப் பட்டன. மேரி சிறிது தூரத்திற்கப்பால் இருந்த தன் தகப்ப ஞரின் வீட்டுக்குச் சென்றுவிட வேண்டுமென்றும், ஒபீ லியா தன் வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்றும், அடிமைகள் அனைவரையும் விற்றுவிட வேண்டுமென் றும், மாளிகை, தோட்டம், கிலங்கள் முதலியவற்றை யும் விற்றுவிட வேண்டுமென்றும் மேரி முடிவு செய் தாள். டாமின் நிலைமை என்ன ? சில நாட்களுக்கு

7 WI

73