பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/96

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இயற்கையாக அமைந்த பண்புகள். ஆளுல் அவன் இருந்த சூழ்நிலை அவனுக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அடிமைகள் அடிக்கடி சவுக்கால் அடிக்கப்பட்டனர். நோயுற்றவர்களையும் களைப்படைக் தவர்களையும் மேஸ்திரிகள் அடித்து அடித்தே வேலை வாங்கினர்கள். ஈவு இரக்கமற்ற, மிருகத்தனமான மனி தர்களிடையே தான் சிக்கிக்கொண்டதை அவன் உணர்ந்திருந்தான். ஆயினும் ஆண்டவனின் அரு ளில் அவனுக்கு முழு நம்பிக்கை இருந்தது. நீ நீரைத் தாண்டிச் செல்லும்போது, நான் உன்னுடனே இருக் கிறேன்...நீ நெருப்பினுாடே செல்லும்போது, நெருப்பு உன்னைச் சுடாது' என்ற வேத வாக்கியத்தை அவன் அடிக்கடி நினைத்துக்கொண்டான். டாமின் சிந்தனைகளைப் பற்றி லெகிரி தானுக யூகித் துக்கொண்டான். டாம் முதல்தரமான வேலையாள் என்றும் அவன் கருதினன். ஆயினும், டாம் உத்த மனயிருந்ததால், லெகிரி அவனை வெறுத்தான். அத் துடன் மற்ற அடிமைகளைக் கொடுமையாக நடத்துவ தில் டாம் மிகவும் வருத்தமடைந்தான். அவன் வாய் திறந்து எதுவும் சொல்லாவிட்டாலும், அவனது கருத்தை லெகிரி உணர்ந்திருந்தான். டாமுக்கு உயர்ந்த பதவியைக் கொடுக்கவேண்டு மென்ருல், அவன் எந்தக் கொடுமையையும் துணிந்து செய்ய முன்வரவேண்டும்; இரக்கமற்ற உள்ளம் கொண்டவனே மேஸ்திரி வேலைக்கு அருகதையுள்ள வன் என்பது லெகிரியின் எண்ணம். ஒருநாள் வயல்களில் டாம் பருத்தி எடுத்துக் கொண்டிருந்தான். அவளுேடு நியூ ஆர்லியன்ஸி லிருந்து வந்த ஸ்திரியான லூஸி என்பவள் அவனரு

& 8

88