பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு, மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். எழுங் திரு, மிருகமே! எழுந்து வேலை செய் இல்லாவிட்டால், மறுபடி ஊசியை உடலில் இறக்குவேன்' என்ருன் அந்தப் பாவி. லூஸி எப்படியோ எழுந்து கின்ருள். பயத்தால் அவளுடைய உடலெல்லாம் கடுங்கிற்று. பயத்தில்ை ஏற்பட்ட பலத்தால், அவள் சிறிது கேரம் மளமள வென்று பருத்தியைப் பறித்துக் கொண்டிருந்தாள். 'ஒழுங்காக வேலை செய்துகொண்டிரு இல்லாவிட் டால், இன்றிரவு உனக்குச் சாவுதான்!' என்று எச்ச ரிக்கை செய்துவிட்டுச் சென்ருன் சம்போ. "அந்தச் சாவு இப்பொழுதே வந்தாலாகாதா ?” என்று லூஸி மெல்ல முணுமுணுத்தது டாமின் செவி களில் கேட்டது. "ஆண்டவரே !. இன்னும் எவ்வளவு காலம் இப்படிக் கழியும்? கர்த்தரே நீர் ஏன் எங்க ளுக்கு உதவி செய்யவில்லை?" என்று அவள் வருங் திளுள். டாம் மீண்டும் அவள் பக்கம் நெருங்கி, தன் கூடையிலிருந்த பருத்தியைக் கொத்துக் கொத்தாக அள்ளி, அவளுடைய கூடையிலே போட்டுவிட்டுத் திரும்பினன். s அவனுடைய அன்பைக் கண்டு உள்ளம் உருகிய லூஸி, 'ஐயோ, உனக்கு ஆபத்தல்லவா! அவர்கள் பார்த்துவிட்டால், உன்னை என்ன செய்வார்கள், தெரியுமா?’ என்று பதறிக்கொண்டே கேட்டாள். 'கஷ்டத்தை உன்னைவிட நான் அதிகம் தாங்கு வேன் ' என்ருன் டாம். = அன்றிரவு அடிமைகள் எல்லோரும், தாங்கள் பறித்த பருத்தியைப் பிரம்புக் கூடைகளிலே சுமந்து

So 0

90