பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


நுரையீரலின் காற்றுக் கொள்ளளவு மிகுதியாகிறது. அதனால் இரத்த ஓட்டம் விரைவு பெறுகிறது. உடலின் திறன்கள் அதிகமாகின்றன.

தசைகளுக்குள்ளே இரத்த ஓட்டம் தாராளமாக சென்று வருவதால், தசைகள் உறுதியும் வலிமையும் அடைகின்றன. உடலின் சக்தி, உடலின் வலிமை உடலின் வேலை செய்யும் அதிக நேர ஆற்றல் எல்லாமே விருத்தியடைகின்றது. எல்லாத் தசைகளும் தங்குதடையில்லாமல் உயிர்க் காற்றைப் பெறுவதால், தளர்ச்சியின்மை இல்லாமல் போகிறது.

எலும்புகளும், தசைநார்களும் வலிமையடைவதால், உடலுக்குத் தெம்பும் திறனும் அதிகமாகிறது. மூட்டுக்களில் உள்ள திசுக்கள் கட்டுக்கோப்பான தன்மையில் செயல்பட்டு உறுதியடைகின்றன.

உடலிலே கொழுப்புகள் கூடுகட்டி மேடுதட்டிப் போகும் செயல்கள் குறைகின்றன. ஆமாம்! உடற்பயிற்சியால் கொழுப்பு கரைகின்றது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது.

இப்படியாக உடலுக்கு உயர்ந்த தோற்றத்தையும், உன்னதமான ஏற்றத்தையும் உடற்பயிற்சிகள் அளிக்கின்றன. இவைகள் யாருக்கு எப்படி உதவுகின்றன தெரியுமா?

யாருக்கு? எப்படி?

இளமையாக இருப்பவர்களுக்கு, இன்னும் இளமைப் பொலிவையும், தெளிவையும், மிகுந்த வலிமையையும் உடற்பயிற்சி வழங்குகிறது.

நடுத்தர வயதினருக்கோ உடலின் எழுச்சியை மீண்டும் கொண்டு வந்துகொடுக்கிறது. தளர்வில்லாத நடை, நிமிர்ந்து நிற்கின்ற தோற்றம், நெகிழ்ந்து மயங்காத நெஞ்சுரம், நிலையுணர்ந்து போராடும் உடலாற்றல் எல்லாவற்றையும்