பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா




மனம் மகிழும் முடிவு:

மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவானது கீழ் வருமாறு இருக்கிறது! கேட்க சுவையான செய்திதான்!

உடலில் நலமும் வளமும் நிறைந்து வாழ்பவர்களுக்கு, முதுமையானாலும் கற்கின்ற ஆற்றல் வளர்ந்து கொண்டுதான் வருகிறது. 60 வயதானாலும், புத்திசாலித்தனமும் அறிவும் குறையாமல் வளர்ந்து பெருகுகிறது. மிகுதியடைகிறது.

இப்படிச் சொல்கிறவர் டாக்டர் பேராசிரியர் பால். பி. பால்டஸ் என்பவர். (Prof. paul B. Baltes) இந்த உளவியல் அறிஞரும், அவரைச் சார்ந்த ஆராய்ச்சிக் குழுவினரும் ஒன்று சேர்ந்து, மேற்கு ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் 250 முதியவர்களிடம் சோதனை நடத்தினார்கள். அதாவது 60 முதல் 80 வயதானவர்களிடையே ஆய்வு நடந்தது. அப்பொழுதுதான் மேலே கண்டவாறு கருத்தைத் தெரிவித்தார்கள்.

வயதாகிறபொழுதே, உடலுறுப்புக்கள் தளர்ச்சி யடைவதுபோலவே, மனமும் கிழத்தன்மை பெற்று விடுகிறது. என்னும் கருத்து பொதுமக்களிடையே பரவியுள்ள கருத்துதான்.

இப்படி நினைப்பது பத்தாம் பசலித்தனமாகும். அது ஒரு கட்டுக் கதையான வதந்தியாகும் என்கிறது மருத்துவத்துறை.

வயது ஏறி முதுமை நிலை வருகிறபொழுது, ஏதாவது ஒரு நோயினால் கடுமையாகத் தாக்கப்படுகிற காரணத்தால், மூளை வளமும் சக்தியும் குறைந்து காணப்படுவது இயற்கைதான்.

ஆனால் இப்படி பாதிக்கப்படுவது பொதுவானதாக இல்லை. எப்பொழுதோ எங்கேயோ, அங்கெங்கு ஒன்று