பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(இ) முன் பயிற்சி போலவே (ஆ) இடது காலை : முன்னே வைத்து கைகள் கம்பியைப் பிடிக்கும் : அமைப்பிலும் இடது கை கணுவிரல் முன்னே வருவது ! போலவும் மாற்றி வைத்து எடையை உயர்த்த ! வேண்டும். எடையைத் தூக்கி நிற்கும்போது நிமிர்ந்த 1 | நெஞ்சு நேர்கொண்ட பார்வையுடன், மார்பு விறைப்பாக : இருக்க வேண்டும். மூச்சு : மேலே தூக்கும் போது மூச்சை | இழுத்து, இறக்கியவுடன் மூச்சை வெளியே விட ! | வேண்டும். ; பயன் : உடல் முழுமைக்கும் நல்ல வலுவைத் தரும். 2. கைத் தசைகளுக்கான பயிற்சிகள் (Biceps and Triceps) பலகையிலிருந்து உயர்த்துதல் கழுத்தின் பின்னிருந்து உயர்த்துதல் போன்ற பயிற்சிகளினால் : முன் கை, பின் கைத் தசைகளுக்கு நல்ல வலிமை | சேரும். ஆனால் கீழ்வரும் தனிப்பயிற்சிகள் இன்னும் , தசைகளைப் பெருக் கவும் உருவாக கவும் உதவுவனவாகும்.