பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

suma 95“un நாசமாக்கவும் வழிவகுக்கும் கவனமின்மையால் உடல் மெலிகிறது. | ஒய்வில்லா அலைச்சல்கள், தூக்கமின்மை, அதிக அளவு மதுபானம், புகை பிடித்தல், பொடி இழுத்தல் போன்ற தீயபழக்கங்களால் திறமிழக்கும் உடல் நாளுக்கு நாள் தேய்ந்து வலுவிழக்கிறது. 4. தன்னைத்தானே தாக்கிக் கொள்வது போல, எதிர்கால கனவிலே ஈடுபட்டு, அச்சத்தால், ஆசையால், கூச் சத்தால், குழப்பத்தால், கவலையால் மன அமைதி கெடவும், சூழ்நிலை காரணமாக உடலாலும் உள் ளத் தாலும் - அமைதியை இழக்கவும் உடல் பொலிவிழக்கிறது. 5. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து பணியாற்றும் பொழுது, உட்காரும் முறையில் உறுப்புக்கள் முறை மாறிப்போக, நுரையீரல்கள், நுண்ணிய இரத்தக் குழாய்கள் கெட்டு உடலை வருத்த உடல் நிலையிழக்கிறது. - - இவையெல்லாம் பழக்கவழக்கங்கள் தான் என்றாலும் தூய பழக்கங்களைச் செய்தால்தான் வாழ்வு வரும் என்பதில்லை. இயற்கையாகவே பழகிப்போய் விட்டதால், தீய பழக்கங்களைக் கொஞ்சம் மாற்றி! | மறந்து, பின் தவிர்த்து விட்டால் போதும். உண்ணுவது, உறங்குவது உடுப்பது போன்று, இரு நாளைக்கு ஒரு அரை மணி நேரமாவது உடற்பயிற்சி | செய்தால் போதும்ானது. அதிக சுமையாக மாறும் | இன்றைய வாழ்க்கை முறையை, அதிக சுவை தருகின்ற | வாழ்க்கையாக மாற்றி விடலாம். அமைதி தருகின்ற ஆனந்த இல்லமாக உள்ளத்தை ஆக்கிவிடலாம். உள்ளத்தை உடற்பயிற்சி செய்யும் நிலைக்குத் ಅಲ್ಲಿ வந்து விட்டாலே இந்த உலக வாழ்வின் சிறப்பும், 19ழிப்பும் உவப்பும், உண்மையும் உங்களுக்கு நன்கு ! புரிந்துவிடும்.