பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s உயரமான மரத்திலிருக்கும் தழைகளை எட்டிப் பறிக்கத் தன் கழுத்தை அதிகமாகப் பயன் படுத்தியதால் தான். . அதே பரிணாம வளர்ச்சிதான் நமது உடலுக்கும், உடலின் எந்தப் பாகங்கள் அடிக்கடி உபயோகப்படுத்தப் படுகின்றனவோ, அவைகளே வளாச்சிபெறும் மலர்ச்சி ! பெறும். ஆகவே ஒவ்வொரு தசையும் அதிக அளவிலே : விரிந்து சுருங்குமாறு பயிற்சி செய்ய வேண்டும். குறுகிய அளவிலே கைகளை விரித்தும், சுருக்கியும் செய்தால் தசைகளுக்கு வளர்ச்சி முழு அளவு வராது வளராது. தோற்றத்தில் எடுப்பும் மிடுக்கும் இராது. நடையில் : உடல் அசைவில் விகாரம் தெரியும். : s எனவே, பயிற்சிகளை கண்ணாடி முன்னால் : ! நின்று சரியான முறைகளில் (இயக்கம்-பகுதியில் : தரப்பட்டிருக்கன்றன) பக்குவத்தோடும், நிதானத்தோடும் , தன்னம்பிக்கையோடும் தளராத ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் தொடர்ந்து செய்ய வேண்டும். 戀 இளமையிலே அறிவு வளர்வதும் பயன் தருவதும் , உடல் வளத்தால் தான் முதுமையிலே அறிவு இருந்தும் : பயன்படாது ஒழிவது உடல் நலிவினால்தான். இதை நீங்கள் உணர வேண்டும். * அருமையான இவ்வுடலை அலட்சியம் செய்து வாழ்வது முதலாகிய பணத்தை தொலைத்து விட்டு, ! வட்டிக்காக ஏங்கும் மனிதனைப் போன்ற நிலைதான். : ! அந்த உடல் நலத்திற்காக உழைக்கும் ஆற்றல் பெறும் , வரை யாரும் உடல் நலம் பெற்றவர்களாக, ! முழுமனிதர்களாகக் கருதப்படவே மாட்டார்கள். ஆகவே , உழைப்புத் திறனே உடல் நலமாய், உளநலமாய் . திகழ்கிறது என்பதனை உணர்ந்து பயிற்சிகளைச் செய்து | பயன் பெற வேண்டும். 懿