பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A-Lmil-f sist. ஜ் செல்லையா 12. பயிற்சிகளைப் பெறுகின்ற தசைகள நோயாளியாகவே ஒருவன் வாழ்கின்றான் என்றால் அவனே சமுதாயத்தின் முதல் விரோத! நவன் நம் உடலில் உள்ள ஒவ்வொரு தசையும் அநேக தசைநான்களால் (fibres) அமைக்கப்பட்டு, தசையுறை என்று சொல்லப்படும் மென்மையான பொருளால் மூடப்பட்டுள்ளன. தசைநாள்கள், தசை நரம்புகள் (Tendens) என்று கூறப்படும் வெண் நரம்புகளால் தசைகள் எலும்புகளோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கின்றன. எலும்புகளைப் போல சீராகவும், இறுதியிலே முடிச்சுக்களைப் பெறாமல் நடுவிலே தசைகள் பெருத்தும், எலும்புகளுடன் இணைகின்ற முடிவிடங்களிலே சிறுத்தும் தசைகள் இருக்கின்றன. அவைகள் சுருங்கவும் விரியவும் கூடிய தன்மைகளைப் பெற்றிருப்பதால் தான், நம்மல் எளிதாக இயல்பாகக் குனியவும், நிமிரவும், வளையவும், நெளியவும், நடக்கவும், ஓடவும் முடிகிறது. அதற்குரிய காரணம் கெண்டைக்கால், தொடை, இடுப்பு, மார்பு, மற்றும் முதுக்குப்புறத் தசைகள் எல்லாம் சுருங்கி விரிவதால்தான். எல்லாத்தசைகளும் ஒன்றோடொன்று சம்பந்தப் பட்டவையாயினும் உடலில் உள்ள அவைகள் மற்றவைகளுக்குத் தடையாக இல்லை. அவைகள் சரீரத்திற்கு அழகை, சீரான அமைப்பைத் தருவதோடு, ஜோராக இயங்கவும் செய்கின்றன. தசைகளோ மீண்டும் சிறுத்தும் குறுகிப் பெருத்தும் உருண்டையாகவும் தட்டையாகவும் தோன்றுகின்றன.