பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- svust Gujpsvпір Ο


- *- - - - - o o -o-o-o-o-o-o-o-o-o- .... * -

உடற்பயிற்சி செய்முறையை நவீன உடற்பயிற்சிக் கருவிகளைக் கொண்டு விஞ்ஞான ரீதியில் பல பயிற்சிகளைக் கண்டு பிடித்துள்ளனர் மேல் நாட்டினர். உடலழகும் வலிவும் மட்டுமல்லாமல் நோய்களைப் போக்கும் விதத்திலும் அக்கறையில் தலைசிறந்து விளங்குகின்றனர். அதற்காக அவர்கள் பல ஆராய்ச்சிகள் செய்து அதைப் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக L] 6\) புத் தகங் களை வெளியிடுகின்றார்கள். இதற்கு, அவர்கள் அரசாங்கமும்! மிகவும் ஒத்துழைக்கிறது. ஆனால் நம்நாட்டில், ! இத்தகைய உடற்பயிற்சி சம்பந்தமான புத்தகங்கள்! வெளிவருவது மிகவும் குறைவு. இது நமக்குப் பெரும் துர் அதிஷ்டம் என்று தான் கூற வேண்டும். - இந்த குறையைப் போக்கத்தான் நண்பர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் எழுதிய நீங்களும்! உடலழகு பெறலாம் என்ற இந்த அருமையான புத்தகம் வெளிவந்திருக்கிறது. இதில் ஆசிரியர் பல ஆராய்ச்சிகள் செய்து மிகவும் நல்ல முறையில் தொகுத்திருக்கிறார். சமுதாயத்தில் தற்போது உள்ள அநாகரீகமான : நாகரீகத்தையும் அதனால் ஏற்படும் தீமைகளையும் மிகவும் நியாயமான முறையில் கண்டித்துள்ளார்.1 உடலின் உயர்வு, உடற்பயிற்சியின் முக்கியத்துவம், ! அதன் உண்மையான செய்முறை, மூச்சுப் பயிற்சியின் விளக்கங்கள், சாதாரணப் பயிற்சிகள், எடைப் பயிற்சிகள் முதலான எல்லாவற்றையும் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் எழுதியிருக்கும் ஆசிரியரின் திறமைக்கு என் ஆசிகள். இந்த அழகிய நூல் வாசகரின் உள்ளத்தைக் கவரும் பெரிய நூல். இதை நன்கு படித்து அதன்படி செயல்புரிந்தால் நன்மை பல ஏற்படும். மேன்மைகளும் வாழ்வில் உண்டாகும். 1-5-1971 அன்பு சென்னை-17. யோகி எஸ்.சுராஜ்