பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேகமாக இழுப்பானை (இழுப்பான் கைகள், முதுகு என்ற நோக்கோடு வருவது போல) வலிந்து இழுக்க வேண்டும். (4) முன் பயிற்சி போல நின்று கொண்டு, இழுப்பானை கைகள் தொங்கிக் கிடக்கும் அளவுக்கு கீழாக (தலைக்கு மேலே பிடித்திருப்பது போல) தொடையில் பிடித்திருக்க வேண்டும். பிறகு இழுப்பானை - மார்பு கைகள் இவைகளுக்கு நோக்கோடு போல பக்கவாட்டிற்கு நீள இழுக்க வேண்டும். (5) கால்களை அகல விரித்து நின்று, உள்ளங்கை முதுகைப் பாாப்பது போல இடுப்புக்குக் கீழே, ஒரு கை இழுப்பானின் ஒரு முனையைப் பிடித்திருக்க, முதுகுக்குக் குறுக்கே இருப்பது போல இழுப்பானின் மறுமுனையைப் பிடித்திருக்க வேண்டும். கீழே பிடித்திருக்கும் கை கீழ் முகமாகவும், மறு கை தோளுக்கு மேலே போவது போலவும் வைத்து நீள இழுக்க வேண்டும். இப்பயிற்சி தோள் பகுதிகளுக்கும், பின் கை தசைகளுக்கும் நல்லது. (6) கால களை அகலமாக கி நின்று, கால்களுக்கு இணையாக இருக்குமாறு உடலை முன்புறமாக வளைத்து நிற்க வேண்டும். உள்ளங்கை உடம்பைப் பார்த்தவாறு இருக்க, இழுப்பானை இரு முனைகளிலும் பிடித்து, மார்புக்கு இணையாக வருமாறு இழுக்க வேண்டும். இப் பயிற்சி வலிய மாள்பு, திடமான தோள் பகுதிகளுக்கும், பின் கைகளுக்கும் நல்லது. (7) இழுப்பானின் ஒரு முனையை ஒரு காலால் மிதித்துக் கொள்ள, மறுமுனையை உள்ளங்கை மேலே தெரியும்படி ஒரு கையால் பிடித்துக் கொண்டு,